விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, தற்போது அதிமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சட்டமன்ற தொகுதி சுற்றுப்பயணம் தொடங்கும் போது ஆதவ் அர்ஜூனா முறைப்படி இணைய உள்ளதாகவும் அவருக்கு அதிமுகவில் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு பொறுப்பாளர் பதவி வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.