Rainbow Coimbatore : கோவையில் சில்லென்ற வானிலை.. விண்ணை அலங்கரித்த இரு வானவில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Rainbow Coimbatore : கோவையில் சில்லென்ற வானிலை.. விண்ணை அலங்கரித்த இரு வானவில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Ansgar R |  
Published : Jun 08, 2024, 08:55 PM IST

Rainbow : கோவையில் தெரிந்த இரு வானவில்களை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 

கோவையில் இன்று சனியன்று காலை வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில், பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பொழிந்து மனதை வருடும் வண்ணம் பெய்தது. அப்போது தான் இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான வானவில் அழகா விண்ணை அலங்கரித்து நின்றது. 

உடனே மேலும் ஒரு வானவில் தென்பட்டதால் அதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் ஆர்வமாக பார்த்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து அது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த நிகழ்வானது கோவை மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி பேசும் பொருளாக மாறி வருவதாக கூறினார். 

பெரும்பாலான பொதுமக்கள் இதுபோன்று இரண்டு வானவில்கள் இதுவரை பார்த்ததில்லை என்றும் இந்த அரிய நிகழ்வு கோவையில் நடந்து இருப்பது அனைவரிடத்திலும் ஆச்சிரியத்தையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.

03:29வரும் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:19தஞ்சையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்ற சுற்றலாப் பொங்கல் திருவிழா ! வைரல் வீடியோ
05:02சென்னை சங்கமம் கிராமிய கலை நிகழ்வுகளுடன் தொடக்கம் ! திமுக எம்.பி.கனிமொழி பேட்டி
02:15எத்தனை பேர் சேர்ந்து வந்தாலும் திமுகவை வெல்ல முடியாது 2026ல் திமுக வெற்றி பெறப்போவது உறுதி
03:43தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது...! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
05:51மக்களுக்கு தெரியாமல் அரசு மதுபான கடை அரசுக்கு எச்சரிக்கை பொதுமக்கள் போராட்டம்
05:292026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றிபெறும் - வானதி சீனிவாசன் பேட்டி
04:29உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !
04:19ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது ! வைகோ பேட்டி.
03:10பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்
Read more