ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். பூத் கமிட்டி அமைப்பு மற்றும் வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, கே.ஏ.செங்கோட்டையன் பேசத் தொடங்கியபோது,"அந்தியூரைச் சேர்ந்த பிரவீன் என்பவர் எழுந்து, அந்தியூர் பகுதி அதிமுக நிர்வாகிகளை அழைக்காமல் கூட்டம் நடத்துவதாக சப்தம் போட்டார். இதனால், தனது பேச்சை நிறுத்திய செங்கோட்டையன் பிரவீனை மேடைக்கு அழைத்து அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால், பிரவீன் செங்கோட்டையனிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கிருந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பிரவீனை தாக்கி மேடையில் இருந்து இறக்கிவிட்டனர்.தொடர்ந்து, நாற்காலிகளை பிரவீன் மற்றும் அவருடன் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு பிரவீனுடன் வந்திருந்தவர்களும் நாற்காலியைத் தூக்கி வீசினர். இதனால், செயல்வீரர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .