
இந்து முன்னணியின் முருக பக்தர்கள் மாநாட்டின் பேசிய அண்ணாமலை, இந்த மாநாடு ஆளும் அரசுக்கு எச்சரிக்கை மணி என்று கூறினார். மாநாட்டில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “உலகத்தில் 0.2 விழுக்காடு உள்ள யூத இனம் தங்களின் வாழ்வியல் முறையை தொந்தரவு செய்ததால் நான்கு நாடுகளோடு சண்டை போட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்கா விமானம் 37 மணி நேரம் பயணித்து இன்னொரு நாடு மீது குண்டு வீசிச் சென்றுள்ளது. ஆனால் இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதால் சிலருக்கு பிரச்னை இருக்கிறது . நமது வாழ்வியல் முறையை தொந்தரவு செய்து, இந்து மதம் என்பதற்காக பஹல்காமில் தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். எனது வாழ்வியல் முறைக்கு பிரச்னை வந்தால் எழுந்து நிற்பேன், அடிப்பேன். இந்தியா முதல் முறையாக வாழ்வியல் பண்பாட்டைக் காக்க எதிர்த்து போராடி வருகிறது. ஆனால், நமது வாழ்வியல் முறைக்கு தொடர்ச்சியாக பிரச்னை வந்துகொண்டுள்ளது. என்று ஆவேசமாக பேசியுள்ளார் அண்ணாமலை .