Watch : ஶ்ரீபெரும்புதூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து! - ஒருவர் பலி! ஒருவர் படுகாயம்!

Watch : ஶ்ரீபெரும்புதூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து! - ஒருவர் பலி! ஒருவர் படுகாயம்!

Published : Aug 02, 2022, 11:01 PM IST

ஶ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் ஶ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

சென்னையைச் சேர்ந்த கோபிநாத், மாரிமுத்து இருவரும் இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லியிலிருந்து காஞ்சிபுரத்தை நோக்கி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். இருங்காட்டுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோபிநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாரிமுத்து பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டுனர் ஒருவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாரிமுத்துவை மீட்டு ஶ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஶ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் கோபிநாத் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஶ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

05:44தவெக பாஜகவின் B-டீமாக தான் அணைத்து நிலையிலும் செயல்படுகிறது ! சேகர்பாபு பேட்டி
05:29விவசாயிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள்!" – மேகதாது அணைக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!
06:15தவெக கட்சி போன்ற சாதாரணமான கட்சி இல்லை பாஜக கட்சி ! அதிரவைத்த நயினார் நாகேந்திரன்!
10:15💥 "சட்டமன்றத்தை 'ஷூட்டிங் ஸ்பாட்' ஆக்கிட்டார் விஜய்!" - உதயநிதி ஸ்டாலின் கொடுத்த மரண அடி!
10:16கொள்கையிலும் மாநில உரிமையிலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை – முதலமைச்சர் விஜய் திட்டவட்டம்!
09:38💥 "எங்களுக்கும் நக்கலா, நையாண்டியா பேச வரும்!" - குட்டிக்கதை சொல்லி மிரட்டிய முதல்வர் விஜய்!
09:20உதயநிதி ஸ்டாலின் VS முதல்வர் விஜய்.. தைரியம் இருந்தால் சொல்லுங்கள்.. எதிர்கொள்ள நாங்கள் தயார்..!
10:23"இது மன்னராட்சி அல்ல, மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சி!" – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி
09:26அனல் பறந்த 2026 சட்டமன்றம் | முதலமைச்சர் விஜய்-ன் அறிவிப்புகளை ஆதாரங்களுடன் துவம்சம் செய்த உதயநிதி !
03:34"கேப்டன் சார்பாக வாழ்த்துக்கள்..!" பிரேமலதாவுக்கு கைகூப்பி நன்றி சொன்ன முதல்வர் விஜய்!
Read more