
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் தேமுதிக உடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருக்கிறார்கள். மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி நிச்சயம் அமையும். இந்த முறை மிக பொறுமையாக, தெளிவாக சரியான நேரத்தில், சரியான முடிவை எடுப்போம். கூட்டணி மந்திரி சபையில் நாங்கள் இருப்போம்" என்றார்.