கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.. பள்ளிகள் திறப்பையொட்டி புதிய வகுப்புக்களுக்கு செல்ல மாணவர்கள் தயாராகி, பெற்றோரும் மாணவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து வரும்நிலையில்கிருஷ்ணகிரி அடுத்த ஒசூர் தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் G.M சலூன் என்னும் முடி திருத்தக கடை நடத்தி வருபவர் மூர்த்தி...தேன்கனிக்கோட்டை பகுதியில் அதிக அளவிலான மலைவாழ் மக்களும், ஏழை எளிய மாணவர்கள் உள்ளதை அறிந்த மூர்த்தி கடந்த ஆண்டு முதல் தன்னால் முடிந்த உதவியை குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செய்திட நினைத்த அவர் தனது சலூன் கடையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு 30 பேருக்கு இலவசமாக முடி திருத்தியதாகவும் இந்தாண்டு தொழிலில் லாபம் கிடைக்கும் முக்கிய நாட்களில் ஒன்றான ஞாயிற்றுக்கிழமை யான இன்று, அரசுப்பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு கட்டிங் செய்ய கட்டணம் ஒரு ரூபாய் மட்டுமே என அறிவிப்பு வெளியிட்டு முடி திருத்தினார்..காலை 8 மணி முதல் இரவு 7 மணிவரை 93 மாணவர்களுக்கு முடி திருத்தியதாக கூறி உள்ளார்