
தேனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் கோயில் நிலங்களை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாக கோயிலைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இந்து மக்கள் கட்சி தொண்டரணியினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது கிராம மக்களின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக செயல்பட்டு கோயிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் ஆடு மற்றும் கோழிகளை கோயில் வளாகத்தில் வெட்டியதாகவும் மேலும் கோயில் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களை அபகரிக்கும் நோக்கத்தோடு போலி பத்திரம் தயார் செய்வதாக குற்றச்சாட்டு தெரிவித்து கோயில் நிலங்களை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் கிருஷ்ணமூர்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனர்