
ஆடி அமாவாசையை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தனது எடைக்கு நிகராக துலாபாரத்தில் அரிசி வழங்கி வழிபாடு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணி ஆகியோர் ஆடி அமாவாசையை முன்னிட்டு எடைக்கு எடை துலாபாரமாக கோவிலுக்கு அரிசியை தானமாக வழங்கினர்.
அப்போது அன்புமணி ராமதாஸ் துலாபாரத்தில் அமரும் போது திடீரென அவர் தவறி விழுந்தார். துலாபாரத்தில் ஒரு புறத்தில் எடை வைப்பதற்கு முன்பாகவே அவரை அர்ச்சகர்கள் அமர வைத்ததால் அவர் தவறி விழுந்தார். முன்னதாக கடற்கரையில் இருவரும் புனித நீராடினர். தொடர்ந்து அன்புமணி மற்றும் அவரது மனைவி ஆகியோர் எடைக்கு எடை துலாபாரமாக கோவிலுக்கு அரிசியை தானமாக வழங்கினர்.