Watch : திருச்செந்தூர் கடலில் பக்தர் தவறவிட்ட 5 பவுன் நகை! மீட்டுகொடுத்த சிப்பி தொழிலாளிகள்!

Watch : திருச்செந்தூர் கடலில் பக்தர் தவறவிட்ட 5 பவுன் நகை! மீட்டுகொடுத்த சிப்பி தொழிலாளிகள்!

Published : Apr 05, 2023, 07:25 PM IST

திருச்செந்தூர் கடலில் பக்தர் ஒருவர் தவறவிட்ட 5 பவுன் நகையை, சிப்பி எடுக்கும் தொழிலாளர்கள் மீட்டு கொடுத்தனர்.
 

உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோயிலுக்கு வருவோர் கடலில் புனித நீராடுவது வழக்கம். அதன்படி, பக்தர் ஒருவரின் 5 சவரன் தங்கக் காப்பு கடலில் நீராடுகையில் திடீரென மாயமானது.

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கார்த்திக். கடந்த 1 ஆம் தேதியன்று தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். பின்னர் அனைவரும் கடலில் புனித நீராடிக் கொண்டிருந்தபோது, கார்த்திக் மகன் ஸ்ரீராம் கையில் அணிந்திருந்த 5 சவரன் தங்கக்காப்பு திடீரென கடலில் தவறி விழுந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து உடனடியாக அங்கிருந்த கோவில் கடல் பக்தர்கள் பாதுகாப்பு குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் தேடியும் தங்கக்காப்பு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடர்ந்து கடலில் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்த சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மணி பிரசாந்த் மற்றும் கடல் பாதுகாப்பு குழுவினர் நேற்று முன்தினம் மாலையில் 5 பவுன் தங்க காப்பினை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள் கார்த்திக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நேற்று காலையில் திருச்செந்தூர் வந்த கார்த்திக்கிடம் சிப்பி அரிக்கும் தொழிலாளர் மணி பிரசாந்த் தங்க காப்பினை ஒப்படைத்தனர்.

02:46Viral Video: துலாபாரம் ஊஞ்சலில் அமர்ந்ததும் குழந்தையாக மாறிய அன்புமணி
01:06Priya Anand: திருச்செந்தூர் முருகன் கோவிலில் மெய்சிலிர்த்து நின்ற பிரியா ஆனந்த்
02:12எட்டயபுரம்.. சாலையோரம் நின்ற பைக் மீது மோதிய கார்.. இருவர் உடல் நசுங்கி பலி - பதறவைக்கும் CCTV காட்சிகள்!
03:58திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு! பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர்! அலறிய பக்தர்கள்! நடந்தது என்ன?
05:06TN Rain : தூத்துக்குடி.. மதுரை.. கொட்டித்தீர்த்த பேய் மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள் - மக்கள் அவதி! Video!
00:35அக்கா எனக்கு கண் பார்வை சரி ஆயிடுச்சு.. உதவி செய்த கனிமொழி கருணாநிதிக்கு நன்றி சொன்ன மாணவி!
00:21Kanimozhi : "மோடி தமிழ் கற்க நாங்களே நல்ல ஆசிரியரை அனுப்புறோம்" - தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி!
05:31என்ன விமர்சனம் வைத்தாலும் "இந்தியா கூட்டணி" வெல்லும்.. 40 இடங்களும் எங்களுக்கே - விஜய் வசந்த் நம்பிக்கை!
01:33தூத்துக்குடியில் பரபரப்பு.. தோழியை பிரிந்த சோகம் - திருமணமான 7 மாதத்தில் பெண் காவலர் எடுத்த பயங்கர முடிவு!
01:17தூத்துக்குடி.. விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் கைது - துறைமுக வாயில் முன் மீனவர்கள் சாலை மறியல்!