திருவள்ளூரில் மாமூல் தர மறுத்த பார் ஊழியர் மீது கொலை முயற்சி; ஊழியர் படுகாயம்

திருவள்ளூரில் மாமூல் தர மறுத்த பார் ஊழியர் மீது கொலை முயற்சி; ஊழியர் படுகாயம்

Published : Mar 21, 2024, 04:43 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் பாரில் மாமூல் கேட்டு தகராறு செய்த மர்ம நபர்கள் மாமூல் தர மறுத்த ஊழியரை அரிவாளால் வெட்டியும், மது பாட்டில்களால் தாக்கியும் பணத்தை பறித்துச் னெ்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி பகுதியில் உள்ள பாரில் அடையாளம் தெரியாத 5 மர்ம நபர்கள் வந்து மது அருந்தியதாகவும், பின்னர் இலவசமாக மது கேட்டும், மாதம் மாமுல் தர வேண்டும் என கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதற்கு பாரில் பணிபுரியும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்நாத் பணம் தர மறுத்ததால் அவரை மது பாட்டிலால் அடித்தும், பின்னர் அரிவாளால் வெட்டியும் பாரில் இருந்த பணத்தை கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். 

இதனைத் தொடர்ந்து பார் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் மீஞ்சூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று மீஞ்சூர் அடுத்த கொக்கு மேடு பகுதியில் பாரில் மாமூல் கேட்டு தகராறு  செய்து பாரில் பணிபுரிந்த ஜெயின் என்பவரை வெட்டி பாரிலிருந்து 20 பாட்டில்களையும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்தவர்கள் குறித்தும் புகார் அளிக்கப்பட்டது. 

மேலும் இது குறித்து மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டும் சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

02:22Accident : திருத்தணி.. பைக் மீது மோதிய கார் - நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்ற கணவன், மனைவி பலியான கொடூரம்!
05:18நயினார் நாகேந்திரன் விவகாரம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கொடுத்த ட்விஸ்ட்..
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
04:33தேர்தல் பணிகளில் ஈடுபட்ட துணை ராணுவத்தினருக்கு விருந்து வைத்த திருத்தணி போலீசார்.. நெகிழ்ச்சி செயல்!
02:11மறுபடியும் அமைச்சராகிடனும் முருகா! திருத்தணியில் வேட்பு மனுவை வைத்து ரோஜா சிறப்பு பிரார்த்தனை
02:18 கோயிலில் இருந்து கொண்டு! அர்ச்சகர்கள் பேசுற பேச்சா இது! ஆபாச பேச்சால் முகம் சுளித்த பக்தர்கள்! வைரல் வீடியோ!
02:10திருவள்ளூரில் மாமூல் தர மறுத்த பார் ஊழியர் மீது கொலை முயற்சி; ஊழியர் படுகாயம்
02:55திருவள்ளூரில் வங்கி மேலாளரை செருப்பால் அடித்த பாஜக மாநில நிர்வாகி; போலீஸ் அதிரடி
02:58234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் விரைவில் சூறாவளி சுற்றுப்பயணம் - புஸ்ஸி ஆனந்த் தகவல்
Read more