திருவள்ளூரில் வங்கி மேலாளரை செருப்பால் அடித்த பாஜக மாநில நிர்வாகி; போலீஸ் அதிரடி

திருவள்ளூரில் வங்கி மேலாளரை செருப்பால் அடித்த பாஜக மாநில நிர்வாகி; போலீஸ் அதிரடி

Published : Mar 14, 2024, 05:32 PM ISTUpdated : Mar 15, 2024, 06:13 AM IST

திருவள்ளூரில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற போது வங்கி உதவி மேலாளருடன் ஏற்பட்ட மோதலில், அவரை செருப்பால் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் வங்கியுடன் இணைந்த ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் (வயது 35) பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அந்த ஏடிஎம் மையத்தில் பொறியாளர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தினை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது அபிலாஷ் பணம் எடுக்க ஏடிஎம் கார்டை மிஷினில் செலுத்தி உள்ளார். இதனால் வங்கி ஊழியர் மெஷின் சர்வீஸ் செய்வததாகவும் பணம் எடுக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.

அதைப் மீறியும் ஏடிஎம் கார்டை உள்ளே புகுத்தி உள்ளார். இதை பார்த்த இந்தியன் வங்கி உதவி மேலாளர் பிரதீப்  வந்து கேட்டபோது வங்கி உதவி மேலாளரை தரகுறைவான வார்த்தையால் பேசி அவரை  திட்டி கன்னத்தில் அறைந்துளார். மேலும் ஆத்திரம் தீராமல் செருப்பால் தலையில அடித்து அவரை தாக்கியுள்ளார்.

உடனடியாக பணம் எடுக்க வெளியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அவரை தடுத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த  மனவள நகர் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது வங்கி உதவி மேலாளர் தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

02:22Accident : திருத்தணி.. பைக் மீது மோதிய கார் - நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்ற கணவன், மனைவி பலியான கொடூரம்!
05:18நயினார் நாகேந்திரன் விவகாரம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கொடுத்த ட்விஸ்ட்..
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
04:33தேர்தல் பணிகளில் ஈடுபட்ட துணை ராணுவத்தினருக்கு விருந்து வைத்த திருத்தணி போலீசார்.. நெகிழ்ச்சி செயல்!
02:11மறுபடியும் அமைச்சராகிடனும் முருகா! திருத்தணியில் வேட்பு மனுவை வைத்து ரோஜா சிறப்பு பிரார்த்தனை
02:18 கோயிலில் இருந்து கொண்டு! அர்ச்சகர்கள் பேசுற பேச்சா இது! ஆபாச பேச்சால் முகம் சுளித்த பக்தர்கள்! வைரல் வீடியோ!
02:10திருவள்ளூரில் மாமூல் தர மறுத்த பார் ஊழியர் மீது கொலை முயற்சி; ஊழியர் படுகாயம்
02:55திருவள்ளூரில் வங்கி மேலாளரை செருப்பால் அடித்த பாஜக மாநில நிர்வாகி; போலீஸ் அதிரடி
02:58234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் விரைவில் சூறாவளி சுற்றுப்பயணம் - புஸ்ஸி ஆனந்த் தகவல்
Read more