சீர்காழி அருகே பேருந்து நிலைத்தில் வசித்த முதியவர் மீட்பு: சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டுகள்!

May 26, 2024, 2:59 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த பாரதிமோகன் அறக்கட்டளை சார்பாக நாள்தோறும் சாலை வசிப்பவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உணவுகள் வழங்கி வரும்போது சீர்காழி அருகே சட்டநாதபுரம் புறவழிச் சாலையில் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் வசித்து வருவது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவருக்கு முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து அவர்களது வாகனத்தில் ஏற்றிச்சென்ற அவர்கள் முதியோர் இல்லத்தில் அவரை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்ட பாரதி மோகன் அறக்கட்டளையை சேர்ந்த சமூக ஆர்வலருக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.