பழனி கோயிலுக்கு சாமி கும்பிட வந்த முருகனுக்கு நெஞ்சுவலி! பதறிய ஊழியர்கள்! கதறிய குடும்பத்தினர்!  நடந்தது என்ன?

பழனி கோயிலுக்கு சாமி கும்பிட வந்த முருகனுக்கு நெஞ்சுவலி! பதறிய ஊழியர்கள்! கதறிய குடும்பத்தினர்! நடந்தது என்ன?

Published : May 26, 2024, 11:46 AM IST

பழனி மலைக் கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான  பக்தர்களும், விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.  பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை இருந்தாலும் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப்கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று வேடசந்தூர் அருகே வடமதுரையைச் சேர்ந்த முருகன் (51) என்பவர் தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோயிலுக்கு வருகை தந்திருந்தார். படிப்பாதை வழியாக குடும்பத்தினர் அனைவரும் கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென முருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து கோவில் பணியாளர்கள் உடனே அவரை மீட்டு ரோப் கார் வழியாக கீழே அழைத்து வந்து திருக்கோவில் ஆம்புலன்ஸ் மூலம்  பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்ட அவரது குடும்பத்தினர் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதனர். 

02:35பாரில் வெடித்த கேங் வார்.. பீர் பாட்டிலால் ஒரே போடு.. தலையில் கொட்டிய ரத்தம்.. ஷாக்கிங் வீடியோ!
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:32பழனியில் பெய்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
00:55டென்ஷன் . . . டென்ஷன் . . . டென்ஷன்; ஓய்வை முடித்துக் கொண்டு 1 நாள் முன்னதாகவே சென்னை புறப்பட்ட ஸ்டாலின்
03:18கொடைக்கானலில் துர்கா ஸ்டாலின் படகு சவாரி!
01:31கொடைக்கானல்: பூம்பாறை முருகன் கோவிலில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
01:02கொடைக்கானலில் மது போதை ஓட்டுநரால் தலைக்குப்புற கவிழந்த கார்!
02:323000 ஆண்டு பழமை.. குழந்தை வேலப்பர் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை..
Read more