அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது கனவில் மட்டுமே நடக்கும் - ஜெ.தீபா பரபரப்பு பேச்சு

அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது கனவில் மட்டுமே நடக்கும் - ஜெ.தீபா பரபரப்பு பேச்சு

Published : Feb 14, 2024, 03:48 PM IST

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்பது கனவில் தான் நடக்கும் என ஜெ.தீபா கருத்து தெரிவித்துள்ளார்.

பழனி முருகன் கோயிலுக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிறுவனர், பொது செயலாளர் ஜெ தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக், கணவர் மாதவன் ஆகியோர் தங்கள் குழந்தைக்கு மொட்டை அடிக்க வந்திருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா, தான் அரசியலில் இருந்து விலகி வெகு காலம் ஆகிவிட்டது. 

தற்போது நடைபெறும் அதிமுக அரசியல் விளையாட்டுக்களம் போல உள்ளது. இந்த முறை  40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்பது கனவில் தான் நடக்கும். அதிமுக மீண்டும் ஒன்றாக சேர்ந்தாலும் ஒற்றுமையாக இயங்குவார்களா என்பது சந்தேகமே. வெற்றி, தோல்வியை  மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 

தமிழக சட்டப்பேரவையை பொருத்தமட்டிலும் ஆளுநர் அவருடைய வேலையை செய்ய வேண்டும். ஆளும் திமுக அரசு அவர்கள் வேலையை செய்ய வேண்டும். ஒருவர் வேலையில் ஒருவர் தலையிடும் போது தான் பிரச்சினை ஏற்படுகிறது. தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது திமுக மேற்கொண்ட  நடவடிக்கைகள் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.

01:51பழனி கோயிலுக்கு சாமி கும்பிட வந்த முருகனுக்கு நெஞ்சுவலி! பதறிய ஊழியர்கள்! கதறிய குடும்பத்தினர்! நடந்தது என்ன?
02:35பாரில் வெடித்த கேங் வார்.. பீர் பாட்டிலால் ஒரே போடு.. தலையில் கொட்டிய ரத்தம்.. ஷாக்கிங் வீடியோ!
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:32பழனியில் பெய்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
00:55டென்ஷன் . . . டென்ஷன் . . . டென்ஷன்; ஓய்வை முடித்துக் கொண்டு 1 நாள் முன்னதாகவே சென்னை புறப்பட்ட ஸ்டாலின்
03:18கொடைக்கானலில் துர்கா ஸ்டாலின் படகு சவாரி!
01:31கொடைக்கானல்: பூம்பாறை முருகன் கோவிலில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
01:02கொடைக்கானலில் மது போதை ஓட்டுநரால் தலைக்குப்புற கவிழந்த கார்!
02:323000 ஆண்டு பழமை.. குழந்தை வேலப்பர் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை..
Read more