Aug 31, 2019, 6:24 PM IST
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்தவகைகயில் சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாடிபில்டர் பாஸ்கரன், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, கபடி வீரர் அஜய் தாக்கூர், தடகள வீரர் முகமது அனஸ், கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ், பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் உள்ளிட்ட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த விருதுகளை வழங்கினர்.
அதனை அடுத்து டெல்லி இருந்து வந்த பாடிபில்டர் பாஸ்கரனுக்கு சிறப்பான வரவேற்ப்பு அழைத்தனர். மேலும் பாடிபில்டர் பாஸ்கரன் ஆசிய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று உள்ளார், உலக அளவிலான ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.