vuukle one pixel image

Thangalaan: ரசிகர்களை துள்ளாட்டம் போட வைக்கும் 'தங்கலான்' பட மினிக்கி மினிக்கி ஃபர்ஸ்ட் லிரிக்கல் பாடல்!

manimegalai a  | Published: Jul 17, 2024, 7:09 PM IST

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'தங்கலான்'. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில் தங்கம் எடுக்கும் பழங்குடி மக்களின் சொல்லப்படாத கதையை படமாக்கி உள்ளார் பா.ரஞ்சித். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ள நிலையில், முக்கிய வேடத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் புரோமோஷன் பணியிலும் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது 'தங்கலான்' படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான  மினிக்கி மினிக்கி பாடல் வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் வெளியாகியுள்ள இந்த பாடல் முழுவதையும்... தன்னுடைய துள்ளலான ஆட்டத்தால் பார்வதி அலங்கரித்துள்ளார். ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலின் வரிகளை உமா தேவி எழுதியுள்ளார். ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் அந்த பாடல் இதோ..