சுறாவோடு ஸ்விம்மிங் போகும் ஜூனியர் NTR - அதிரடி ஆக்ஷனுடன் வெளியானது "தேவரா" ட்ரைலர்!

Sep 10, 2024, 7:57 PM IST

மிகப்பெரிய கலை குடும்பத்தை சேர்ந்த நடிகர் தான் ஜூனியர் என்டிஆர், கடந்த 1991ம் ஆண்டு முதல் கலை உலகில் இவர் பயணித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் "ஸ்டூடன்ட் நம்பர் ஒன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக கலை உலகில் தனது பயணத்தை தொடங்கினர். தொடர்ச்சியாக தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும் ஜூனியர் என்டிஆர், தற்போது பாலிவுட்டு உலகில் உருவாகி வரும் "வார்" படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் தனது முதல் பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமாகிறார். 

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான RRR திரைப்படம், தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆகவே இப்போது கோலிவுட்டிலும் ஜூனியர் என்டிஆருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் "தேவரா" திரைப்படத்தின் முதல் பாகத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து முடித்துள்ளார். 

அதேபோல அப்பிடத்தின் இரண்டாம் பாக படபிடிப்பு பணிகளையும் விரைவில் அவர் துவங்க உள்ள நிலையில், இப்பொது அந்த தேவரா படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தின் மூலம் பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் முதல்முறையாக தென் இந்திய சினிமாவில் கால் பதித்திருக்கிறார்.