பணத்தை ஈர்க்க தூங்கும் போது செய்யக்கூடாத தவறுகள்..!!

Published : Feb 18, 2025, 08:11 PM IST

Vastu Tips  : வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் தூங்கும் போது செய்யும் சில தவறுகள்  உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது.

PREV
16
பணத்தை ஈர்க்க தூங்கும் போது செய்யக்கூடாத தவறுகள்..!!
பணத்தை ஈர்க்க தூங்கும் போது செய்யக்கூடாத தவறுகள்..!!

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு தனி சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வாஸ்து சாஸ்திரத்தின் படி செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். இது தவிர அதிர்ஷ்டம், செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும். வாஸ்து சாஸ்திரத்தில் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் தூக்கம். ஆம், தூக்கம் தொடர்பான சில விதிகள் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. நீங்கள் தூங்கும் போது சில தவறுகளை செய்தால் அது உங்களது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. எனவே நீங்கள் தூங்கும் போது சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். அதனால் உங்களுக்கு நன்மைதான் கிடைக்கும். எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி தூங்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்பதை பற்றி இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

26
எண்ணெய்:

வாஸ்து சாஸ்திரத்தின் படி தூங்கும் போது எந்தவிதமான எண்ணெயையும் உங்களது படுக்கையறையில் வைத்திருக்க வேண்டாம். ஒருவேளை அப்படி நீங்கள் வைத்தால், அதனால் உங்களது வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் கிடைக்காது.

36
மருந்துகள்:

எந்த வகையான மருந்துகளையும் உங்களது படுக்கைக்கு அருகில் ஒருபோதும் வைத்து தூங்க வேண்டாம். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் யாராவது ஒருவர் எப்போதுமே நோய்வாய்ப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

46
பணப்பை:

வாஸ்து சாஸ்திரத்தின் படி நீங்கள் தூங்கும் படுக்கைக்கு அருகில் பணப்பையை ஒருபோதும் வைத்திருக்க வேண்டாம். இப்படி நீங்கள் வைத்தால் வீட்டில் வறுமை ஏற்படும்.

இதையும் படிங்க:  தலையணைக்கு கீழே இந்த '7' பொருள் வெச்சு தூங்குங்க.. அதிஷ்டம் பெருகும்!

56
தண்ணீர் பாட்டில்:

நம்மில் பெரும்பாலானருக்கு இரவில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். இதனால் படுக்கைக்கு அருகில் எப்போதுமே தண்ணீர் பாட்டில் வைத்திருப்போம். ஆனால் இப்படி செய்வது வாஸ்து சாஸ்திரத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. படுக்கைக்கு அருகில் தண்ணீர் வைத்து தூங்கினால் எதிர்மறை சக்திகள் அந்த நபரின் மீது வாழ்நாள் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும்.

இதையும் படிங்க:   தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுறீங்களா? உங்க வீட்ல 'இந்த' வாஸ்து பிரச்சனைகள் இருக்கலாம்!

66
காலணிகள்:

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் படுக்கைக்கு அருகில் காலணிகள் அல்லது செருப்புகளை ஒருபோதும் வைக்கவே வேண்டாம். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் நீங்கள் எப்போதுமே ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொள்வீர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories