2 நாயகிகளுடன் பிக்பாஸ் ஷாரிக் நடித்துள்ள கிரைம் திரில்லர் படம் ‘நேற்று இந்த நேரம்’ - திகிலூட்டும் டிரைலர் இதோ

By Ganesh A  |  First Published Dec 22, 2023, 10:38 AM IST

பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள கிரைம் திரில்லர் படமான நேற்று இந்த நேரம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.


கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படம் "நேற்று இந்த நேரம்". பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர்.

பார்ட்டி கொண்டாட போன இடத்தில் நண்பர்கள் மர்மமான முறையில் காணாமல் போக, அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களை கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கெவின் என் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கோவிந்த்.என் மேற்கொண்டுள்ளார். நேற்று இந்த நேரம் படத்தின் இசை உரிமத்தை ஜீ மியூசிக் சவுத் வாங்கியுள்ளது. படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவி ஜி ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் ஜனவரி 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்... எதிர்பாராததை எதிர்பாருங்கள்! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

click me!