வெற்றிமாறன் கூட்டணியில் மீண்டும் ராஜனாக அமீர்... கவனம் ஈர்க்கும் மாயவலை டீசர் இதோ

By Ganesh A  |  First Published Dec 9, 2023, 3:21 PM IST

ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அமீர், சத்யா நடிப்பில் உருவாகி இருக்கும் மாயவலை திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவில் மெளனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற தரமான திரைப்படங்களை கொடுத்தவர் அமீர். இவர் தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார். அதற்கு காரணம் வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் ராஜன் என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்தது தான். அந்த கதாபாத்திரம் அப்படத்தின் நாயகன் தனுஷுக்கு நிகராக பேசப்பட்டது. அந்த அளவுக்கு அற்புதமாக நடித்திருந்தார் அமீர்.

இதையடுத்து அவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அமீர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் மாயவலை. திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் அமீருடன் சஞ்சிதா ஷெட்டி, நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மாயவலை திரைப்படத்தை அமீர் தான் தன் சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து உள்ளார். இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் கம்பெனி நிறுவனம் தான் வெளியிடுகிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தில் ஒளிப்பதிவு பணிகளை ராம்ஜி மேற்கொள்ள அஹமத் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

இந்த நிலையில், மாயவலை படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த டீசரை இயக்குனர்கள் கரு பழனியப்பன், சேரன், சமுத்திரக்கனி, சசிகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். வடசென்னையை தொடர்ந்து இப்படத்திலும் ராஜன் என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் அமீர். இதனால் இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்... பருத்திவீரன் பிரச்சனையில் நான் பெற விரும்புவது யாசகமல்ல... என் உரிமை! இயக்குனர் அமீர் காட்டம்

click me!