நிஜமாவே கோல்டு-ணா நீ... புதிதாக BMW கார் வாங்கியதும் தங்கதுரை செய்த செயலுக்கு குவியும் பாராட்டு

By Ganesh A  |  First Published Jul 25, 2024, 8:43 AM IST

விஜய் டிவியில் காமெடியனாக கலக்கி வரும் டைகர் தங்கதுரை புதிதாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.


விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பேமஸ் ஆனவர் தங்கதுரை. பல வருடங்களாக விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாக கலக்கி வரும் தங்கதுரைக்கு என தனி அடையாளத்தை கொடுத்தது அவரின் பழைய ஜோக்குகள் தான். இதனாலேயே அவருக்கு தனி ரசிகர் படையே உருவானது. தன்னுடைய பழைய ஜோக்குகளை ஒரு புத்தமாகவும் வெளியிட்டுள்ளார் தங்கதுரை. அதற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார். விஜய் டிவியில் பல வருடங்களாக வேலை பார்த்து வரும் தங்கதுரை தற்போது தன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகி இருக்கும் சந்தோஷத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தங்கதுரைக்கு பிஎம்டபிள்யூ கார் வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாம். அது தற்போது நனவாகி இருக்கிறது. அவர் சொந்தமாக பிஎம்டபிள்யூ காரை வாங்கி இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... 34 வயசு கவினுக்கு ஜோடி... 38 வயசு யஷ்ஷுக்கு நயன்தாரா அக்காவா? டென்ஷனான லேடி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

பொதுவாக பிரபலங்கள் புதிதாக கார் வாங்கினால் அதில் தங்களது குடும்பத்தினருடன் ரைடு சென்று அதை வீடியோவாக எடுத்து வெளியிடுவார்கள். ஆனால் தங்கதுரை அவ்வாறு செய்யாமல், தன்னுடைய பிஎம்டபிள்யூ காரில் ஏழை குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்களுடன் சென்னையை ஒரு ரவுண்டு அடித்துள்ளார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பதை தங்கதுரையின் இந்த செயல் வெளிப்படுத்தி உள்ளது.

தங்கதுரையின் பிஎம்டபிள்யூ காரில் பயணித்த அந்த குழந்தைகளுக்கு அவர் ருசியான உணவு வாங்கி கொடுத்தது மட்டுமின்றி ஷாப்பிங்கும் அழைத்து சென்று அங்கு அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்துள்ள தங்கதுரை, அவர்கள் படிக்க தேவையான கல்வி உபகரணங்களையும் அன்பளிப்பாக அளித்து இருக்கிறார். அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் வாங்கிய இந்த காரின் விலை ரூ.45 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... எல்.ஐ.சி பட டைட்டிலை பட்டி டிங்கரிங் பார்த்து மாற்றிய விக்னேஷ் சிவன்... புது டைட்டில் என்ன தெரியுமா?

click me!