- Home
- Gallery
- எல்.ஐ.சி பட டைட்டிலை பட்டி டிங்கரிங் பார்த்து மாற்றிய விக்னேஷ் சிவன்... புது டைட்டில் என்ன தெரியுமா?
எல்.ஐ.சி பட டைட்டிலை பட்டி டிங்கரிங் பார்த்து மாற்றிய விக்னேஷ் சிவன்... புது டைட்டில் என்ன தெரியுமா?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Pradeep Ranganathan, Vignesh Shivan
கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே என்கிற படத்தை இயக்கியதோடு மட்டுமின்றி அப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகம் ஆனார் பிரதீப் ரங்கநாதனன். லவ் டுடே திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலை வாரிக் குவித்து மாஸ் காட்டியது. லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின் பிரதீப் ரங்கநாதனுக்கு ஹீரோவாக நடிக்க சான்ஸ் குவிந்தது.
Pradeep Ranganathan, Krithi Shetty
அதை ஏற்று அவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும், ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின், சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... அனிருத் - விஜய் சேதுபதி குரலில் பிரசாந்தின் 'அந்தகன்' பட ஆந்தம் ப்ரோமோ பாடலை வெளியிட்டார் தளபதி விஜய்!
Love insurance Kompany movie team
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் கதையை முதலில் சிவகார்த்திகேயனுக்கு தான் சொல்லி இருந்தார் விக்கி. ஆனால் சில காரணங்களால் அப்படம் அறிவிப்போடு நின்று போனது. அதைத் தொடர்ந்து தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து படத்தை எடுத்து முடித்துள்ள விக்கி, அதற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி அதாவது சுருக்கமாக எல்.ஐ.சி என வைத்திருந்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. டைட்டிலை மாற்ற சொல்லி நோட்டிசும் அனுப்பப்பட்டது.
LIK movie
இதனால் டைட்டிலை மாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதே டைட்டிலை வைத்துவிட்டு அதில் லேசாக பட்டி டிங்கரிங் பார்த்து LICக்கு பதிலாக LIKஎன மாற்றி இருக்கிறார். அதாவது Love Insurance Company க்கு பதிலாக Love Insurance Kompany என மாற்றி இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்... இந்த மனசு தான் கடவுள்..! ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்து அன்பால் உருக வைத்த தர்ஷா குப்தா!