சிறகடிக்க ஆசை நாடகத்தின் கதாநாயகன் வெற்றி வசந்த் தனது பெயரில் மோசடி நடைபெறுவதாகவும், அதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை நாடகமானது தமிழகத்தின் பெரும்பாலான குடும்பங்கள் கொண்டாடும் நாடகமாக உள்ளது. இந்த நாடகத்தின் மூலம் மிகவும் பிரலபமடைந்த நாயகன் வெற்றி வசந்த் பெயரில் சமூக வலைதளத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக வெற்றி வசந்த் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் பேஸ்புக்கில் தொடக்கத்தில் கணக்கு வைத்திருந்தேன். அப்போது ஒருசில புகைப்படங்களை பதிவிட்டேன். ஆனால், அதன் பின்னர் என்னுடைய கணக்கில் இருந்து என்னுடைய புகைப்படங்களை நீக்கிவிட்டு அக்கவுண்டை லாக் செய்துவிட்டேன்.
ஆனால் என்னை போன்று யாரோ ஒருவர் போலி அக்கவுண்ட் ஓபன் செய்து பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் எனது ரசிகர்களிடம் என்னை போன்று பேசி வருகிறார்கள். இது எனக்கு இப்போது தெரிய வந்துள்ளது. நானும் அது குறித்து புகார் அளித்துள்ளேன். நான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே உள்ளேன். யாரும் போலி அக்கவுண்டை நம்ப வேண்டாம்” என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.