Siragadikka Aasai : சர்பிரைஸ் கொடுத்து பாட்டியை அசர வைத்த முத்து, மீனா.. நோஸ்கட் வாங்கிய மனோஜ்..

Published : Jul 08, 2024, 06:46 PM ISTUpdated : Jul 08, 2024, 06:47 PM IST
Siragadikka Aasai : சர்பிரைஸ் கொடுத்து பாட்டியை அசர வைத்த முத்து, மீனா.. நோஸ்கட் வாங்கிய மனோஜ்..

சுருக்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று அதாவது ஜூலை 8-ம் தேதி ஒளிபரப்பாகும் எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று அதாவது ஜூலை 8-ம் தேதி ஒளிபரப்பாகும் எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

சிறகடிக்க்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடின் தொடக்கத்தில் மனோஜ் கிஃப்ட் கொடுத்ததை தொடர்ந்து ஒவ்வொருவரும் கிஃப்ட் கொடுக்கின்றனர். அப்போது தன்னுடைய கிஃப்ட் கேக் தான் என்று இந்த கேக் பெயர் நாச்சியா கேக் என்று எடுத்துக் கொடுக்கிறார். ஸ்ருதி போனை எடுத்து கொடுக்க, பிறகு விஜயா பார்வதியை கூட்டி வந்து டிவியை எடுத்து கொடுக்கிறார். அப்போது பார்வதி எந்த மருமகளும் மாமியாருக்கு டிவியை கிஃப்டாக கொடுத்திருக்க மாட்டார் என்று பெருமையாக பேசுகிறார். 

அதற்கு பாட்டி விஜயா சொல்லிக் கொடுத்த மாதிரியே பார்வதி பேசிட்டா என்று கலாய்க்க, நான் ஏன் அப்படி சொல்லிக்கொடுக்க போகிறேன் என்று விஜயா சொல்கிறார். அடுத்து எல்லாரும் கிஃப்ட் கொடுத்துட்டோம் உங்க ஸ்பெஷல் கிஃப்ட் யாருக்கு என்று மனோஜ் கேட்க அதற்கு பாட்டி முத்து வரட்டும் என்று கூறுகிறார். அப்போது முத்து காலையில் தான் வருவான் என்று மனோஜ் கூறும் போதே வாசலில் முத்து எண்ட்ரி கொடுக்கிறார். 

கர்ப்பமாக இருக்கும் ராஜா ராணி சீரியல் நடிகை.. குத்தாட்டம் போட்ட வீடியோ வைரல்!

வீட்டிற்கு வரும் முத்துவை எங்கடா போன என்று பாட்டி கண்டிக்க, பாட்டிக்கு என்ன கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்க என்று மனோஜ் கேட்கிறார். அதற்கு முத்து நான் எந்த கிஃப்ட்டும் வாங்கிட்டு வரல என்று கூற மனோஜ் நான் சொன்ன மாதிரியே நடந்திருக்கு என்று கூறுகிறார். அப்போது முத்து நான் கிஃப்ட் வாங்கிட்டு வரல, ஆனா கூட்டிட்டு வந்திருக்கேன் என்று நாச்சியார் பட்டியில் சிறுவயது தோழிகள் இருவரை அழைத்து வந்தார்.

அவர்கள் இருவரையும் பார்த்து மிகவும் சந்தோஷப்படும் பாட்டி, அவர்களின் குடும்பம் பற்றி கேட்கிறார். பின்னர் தனது மருமகள்கள், பேத்தி, பேரன்களை பாட்டி அறிமுகம் செய்து வைக்கிறார். அவர்களோடு சந்தோஷமாக பாட்டிக் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து முத்துவும் மீனாவும் சந்தோஷம் அடைகின்றனர். 

நான் 30 வருஷத்திற்கு முன்னாடி போன மாதிரி இருக்கு என்று பாட்டி சந்தோஷப்பட மொத்த குடும்பமும் சந்தோஷப்படுகின்றனர். பின்னர் கேக் வெட்டி மாறி மாறி ஊட்டிவிடுகின்றனர். அதை பார்த்து மனோஜ் சோகமாக இருக்க, ரோகிணி, கண்டிப்பா ஸ்பெஷல் கிஃப் அவங்களுக்கு கிடைக்காது, ஏன்னா மீனா பாட்டிக்காக எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். 

Anna Serial: ஜெயிலுக்கு போக தயாரான சண்முகம்.. பரணி கொடுத்த அதிர்ச்சி - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்!

அப்போது மீனா, நான் பாட்டிக்காக ஒரு விஷயம் பண்னிருக்கேன் என்று கூறி, தான் வீடியோ எடுத்த விஷயத்தை கூறி அதை எல்லோருக்கும் டிவியில் போட்டு காட்டுகிறார். பாட்டி தனது 80 ஆண்டு வாழ்க்கை அனுபவத்தை கூற அண்ணாமலை கண் கலங்குகிறார். ரோகிணி மிகப்பெரிய பல்பு வாங்க விஜயா மீனாவை முறைப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Siragadikka Aasai : காதல் விவகாரத்தை போட்டுடைத்த சத்யா... ரேகாவின் தந்தை எடுத்த தடாலடி முடிவு
Ethirneechal Thodargiradhu : ஜனனியை கடத்தும் கும்பல்... சக்தியிடம் ஆதாரத்தை கேட்கும் ஈஸ்வரி