சின்னத்திரை பிரபலங்கள் முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை பலரும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோ, வீடியோ போன்றவைகளை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ராஜா ராணி சீரியல் நடிகை முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி சீரியலும் ஒன்றாகும். ராஜா ராணி 2ம் பாகத்தில் நடித்தவர் நடிகை நிஹாரிகா. மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் மீடியாவில் நுழைந்தவர் நிஹாரிகா. பிறகு வம்சம், வேலைக்காரன், வித்யா நம்பர் 1 போன்ற சீரியல்களில் நடித்தார்.
அதே போல பல படங்களிலும் நடித்துள்ளார் நடிகை நிஹாரிகா. நிஹாரிகா இயக்குனர் ரஜித் என்பவரை காதலித்து கரம்பிடித்தார். நிஹாரிகா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் முக்கிய அப்டேட்டை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நிஹாரிகா. கர்ப்பமாக இருக்கும் சின்னத்திரை நடிகை நிஹாரிகா கஜினி பட பாட்டுக்கு நடனமாடி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. முயற்சி எடுத்த இயக்குனர் வெற்றிமாறன்.. தீயாய் பரவும் தகவல்