விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் என்ன நடக்குமோ என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இன்று அதாவது ஜூலை 11-ம் தேதி ஒளிபரப்பாகும் எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் என்ன நடக்குமோ என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இன்று அதாவது ஜூலை 11-ம் தேதி ஒளிபரப்பாகும் எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும் மீனாவும் இன்றும் அந்த நகையை யார் மாற்றியிருப்பார் என்று தீவிரமாக கண்டுபிடிப்பதிலேயே நகர்கிறது. மனோஜிடம் பேசி உண்மையை தெரிந்துகொள்ளலாம் என்று ஸ்ருதி நகைக்கடை ஊழியர் பெண் போல் பேசத் தொடங்குகிறார். ஆனால் அதற்கு அலர்ட்டான மனோஜ், நான் எதுவும் வாங்கவில்லை, இதே போல் போன் பண்ணி தொந்தரவு செய்தால் சைபர் கிரைமில் புகார் அளித்துவிடுவேன் என்று திட்டிவிட்டு போனை வைக்கிறார்.
அப்போது ரவி, மனோஜ் உண்மையிலேயே அந்த நகையை திருடவில்லையோ என்னவோ என்று சொல்ல, அப்போது குறுக்கிட்ட முத்து அப்படி எல்லாம் இருக்கவே இருக்காது டா மனோஜை பற்றி தான் உனக்கு தெரியுமே, அவன் தான் தப்பு பண்ணிருக்கான். ஆனால் உண்மையை சொல்லாமல் தப்பித்துவிட்டான்.
அந்த நேரத்தில் ரோகிணி தன்னுடைய அம்மாவிடம் பேசி கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ் அவசரமாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு, வீட்டிற்கு வந்து விஜயாவிடம் நடந்ததை சொல்கிறார். அப்போது விஜயா, முத்து இவ்வளவு முயற்சி எடுத்துட்டானா? அப்ப உண்மையை கண்டுபிடிக்காமல் விடமாட்டான் என்று கூறிவிட்டு, நீ 4 லட்சத்தை ரெடி பண்ணு என்று கூறுகிறார். இதை கேட்டு மனோஜ் அதிர்ச்சி அடைகிறார்.
அதே நேரம் முத்துவுக்கு போன் செயயும் மீனா, உண்மையை சொல்ல பார்வதி தான் சரியான ஆளு என்று கூறி, முத்துவையும் பார்வதி வீட்டுக்கு வர சொல்லிவிட்டு தானும் கிளம்பிப் போகிறாள். இருவரும் பார்வதியிடம் பாட்டியின் பிறந்தநாள் விழா குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது, நாங்க பாட்டிக்கு ஒரு ரெட்ட வட சங்கிலி வாங்கலாம்னு இருந்தோம். மீனாவின் சங்கிலியை கொடுத்துவிட்டு அதை வாங்கலாம்னு இருந்தோம் என்று கூற, அப்போது பாவதி அதுதான் கவரிங் நகை ஆச்சே என்று கூற, அது எப்படி உங்களுக்கு தெரியும் என்று முத்து கேட்க, விஜயா தான் அதை சொன்னா என்று பார்வதி சமாளிக்கிறார்.
அப்போது நகை எப்படி மாறுச்சுன்னு ஏதாவது சொன்னாங்களா என்று கேட்க, மீனா வீட்டில் மாறி இருக்கும் என்று பார்வதி கூறுகிறார். அதற்கு முத்து, இல்ல அத்த, நடுவுல ஏதோ நடந்திருக்கு, அது என்னன்னு அம்மாவுக்கு தான் தெரியும் என்று கூற ஆமா விஜயாவுக்கு தான் தெரியும் என்று பார்வதி உளறுகிறார்.
ஒரு கட்டத்தில் பார்வதி மனம் மாறி உண்மையை சொல்ல வர, அப்போது விஜயா ஓடி வந்து அதை தடுத்து விடுகிறார். இதையடுத்து முத்து கோபத்தில் கிளம்பி, மீனாவும் கிளம்புகிறார். உண்மையை எப்படி கொண்டு வருவது என்று மீனாவும் முத்துவும் பேசிக்கொண்டிருக்கும் போது செல்வம் போன் பண்ணி ஃப்ரிட்ஜ் வாங்க வருமாறு கூப்பிடுகிறார். ஆனால் நான் வரல என்று முத்து சொல்ல, மீனா முத்துவை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிகிறது.