ரமணி எடுத்த முடிவு.. ஷாக்கில் ராம், மாயா விஷயத்தில் நடந்தது என்ன? சந்தியா ராகம் சீரியல் அப்டேட்!

By manimegalai a  |  First Published Jan 8, 2024, 8:19 PM IST

தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம், இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் வீட்டிற்கு வந்த கிஷோர் மாயாவை கூட்டி கொண்டு செல்வதாக சொல்ல தனம் பாட்டியிடம் சென்று நடந்த உண்மைகளை உடைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
 


அதாவது, ரமணி பாட்டி ரகுராமை தனியாக அழைத்து உன்கிட்ட நான் ஒன்னு சொல்லுவேன், நான் நீ அதை ஏற்றுக்கணும், ஏன் எதுக்கு என்று கேள்வி கேட்க கூடாது என சொல்கிறார், ரகுராம் என்னமா சொல்லுங்க என்று கேட்க ரமணி அம்மாள் மாயா இங்கயே இருக்கட்டும் என்று சொல்ல ரகுராம் என்னமா நீங்களே இப்படி சொல்றீங்க என்று ஷாக்குடன் கேட்க காரணம் எதுவும் என்கிட்டே கேட்காத என்று சொல்கி நகர்கிறார். 

அதன் பிறகு மாயாவும் கிஷோரும் கீழே இறங்கி வருகின்றனர், மாயா முதலில் ரமணி பாட்டியிடம் சென்று பேசுகிறாள், அதன் பிறகு அப்புவிடம் வந்து நீ நல்லா படிச்சா மட்டும் போதாது, நல்ல மனிதனாக வளரனும் என்று அறிவுரை சொல்கிறாள். அடுத்து ஜானகியிடம் வந்து நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். எனக்கு வேற வழியும் தெரியல. எங்க அம்மா போட்டோல் நானும் இருக்கேன், அதனால் நான் உங்க கூட இருக்கிற மாதிரி நினைச்சுக்கோங்க, நாம் திரும்ப பாக்க முடியுமான்னு தெரியல என்று சொல்கிறாள். 

Latest Videos

Babloo Prithiveeraj: பிரிந்த வேகத்தில்.. 24 வயது காதலியுடன் இணைந்த பப்லு! வைரலாகும் செல்ஃபி புகைப்படம்!

தொடர்ந்து ரகுராம் அருகே வரும் மாயா உங்ககிட்ட பேச ஒன்னும் இல்ல, ஆனால் ஒன்னு உங்க பிள்ளை தனத்துக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு நல்லா அப்பாவாக நடந்துக்கோங்க என்று சொல்ல அவர் என்ன அட்வைஸா என்று கேட்க இல் சொல்லணும்னு தோணுச்சு என்று சொல்லி எல்லாரிடமும் இருந்து விடை பெற ரகுராம் எதுவும் சொல்லாமல் நிற்கிறார். 

Annapoorani: லவ் ஜிகாத் சர்ச்சையில் சிக்கிய நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படம்! மும்பை போலீசார் வழக்கு பதிவு

இவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றதும் ரகுராம் மாயா இங்கயே இருக்கட்டும் என்று சொல்ல ஜானகி சந்தோசப்பட மாயா இல்ல எனக்கு செட்டாகாது என்று சொல்லி கிளம்ப தனம் அவளை கட்டி பிடித்து அழுது சமாதானம் செய்து வீட்டிற்குள் அழைத்து வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
 

click me!