பயந்து விலகிய கார்த்தி! விட்டுக்கொடுக்காமல் ஜெயித்த தீபா... கடுப்பானது இவங்க தான்! கார்த்திகை தீபம் அப்டேட்!

By manimegalai a  |  First Published Jan 3, 2024, 11:09 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் செல்பி பாட்டி கணவன் மனைவியாகவும் மனைவி கணவனாகவும் மாறி பேசி கொள்ள வேண்டும் என்ற போட்டியை வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
 


அதாவது, முதலில் அருண் ஐஸ்வர்யா போட்டியில் பங்கேற்றதை தொடர்ந்து மீனாட்சி ஆனந்ததாகவும் ஆனந்த் மீனாட்சியாகவும் மாறி நடிக்க தொடங்கினர். இவர்கள் இருவரும் நடித்து முடிந்ததை தொடர்ந்து அருணாச்சலம், அபிராமி ஆகியோர் போட்டியில் பங்கேற்கின்றனர். 

அபிராமி அருணாச்சலமாக மாற அருணாச்சலம் அபிராமியாக மாறி நடிக்க தொடங்குகிறார். அருணாச்சலம் அபிராமி போல கம்பீரமாக ஷோபாவில் உட்கார்ந்திருக்க அருணாச்சலம் போல் நடந்து வரும் அபிராமி என்ன நாச்சியா என்னாச்சு, ஏன் இப்படி உட்கார்ந்திருக்க என்று கேள்வி கேட்கிறாள். இவர்கள் இருவரும் நடித்து முடிந்ததை தொடர்ந்து கார்த்திக், தீபாவிற்கான வாய்ப்பு வருகிறது. 

Latest Videos

'கேப்டன் மில்லர்' பட விழாவில் சிவராஜ் குமாருடன் ஸ்டேஜில் டான்ஸ் ஆடி தெறிக்கவிட்ட தனுஷ்! வைரலாகும் வீடியோ!

Amala Paul: திருமணமான 2 மாதத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து.. இன்ப அதிர்ச்சி கொடுத்த அமலா பால

ஆனால் கார்த்திக் நான் இதில் பங்கேற்கவில்லை, ரெண்டு கேரக்டரையும் தீபாவே பண்ணட்டும் என்று சொல்ல தீபா கார்த்திக்கை போலவும் தன்னை போலவும் மாறி மாறி பேசி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறாள். கடைசியில் இந்த போட்டியில் ஜெயித்தது தீபா தான் என பாட்டி அறிவிக்க ஐஸ்வர்யா கடுப்பாகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

click me!