தீபாவை மிரட்டும் சிதம்பரம்.. பாட்டி வைத்த போட்டியில் வெற்றி யாருக்கு? - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

By Ganesh A  |  First Published Jan 2, 2024, 4:05 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் அருண் நீச்சல் தெரியாமல் குளத்தில் விழ சிதம்பரம் சக்தியை அறிந்த தீபா சத்தம் போட்டு அருணை காப்பாற்றிய நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 


தமிழ் சின்னத்திரையில் ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். சீரியலில் நேற்றைய எபிசோடில் அருண் நீச்சல் தெரியாமல் குளத்தில் விழ சிதம்பரம் சக்தியை அறிந்த தீபா சத்தம் போட்டு அருணை காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதாவது, மீண்டும் தீபாவுக்கு போன் பண்ணும் சிதம்பரம் இன்னும் என்ன எதுவும் சொல்லல பண்ணதெல்லாம் போதாதா பெருசா பண்ணனுமா என்று மிரட்டுகிறார். 

இதைத் தொடர்ந்து பாட்டி அடுத்த போட்டியை அறிவிக்கிறார். அதாவது புருஷன் பொண்டாட்டி அப்படியே தங்களது கதாபாத்திரத்தை மாற்றி நடித்துக் காட்ட வேண்டும் என்பதுதான் போட்டி என்று கூறுகிறார். இதனைத் தொடர்ந்து முதல் ஆளாக ஐஸ்வர்யா அருண் ஆகவும் அருண் ஐஸ்வர்யாவாகவும் மாறுகிறான். 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... வார்னிங் கொடுத்த பரணி... ஜெயிலில் இருந்து எஸ்கேப் ஆன சண்முகம் - அண்ணா சீரியலில் செம்ம டுவிஸ்ட் வெயிட்டிங்

அருணாக நடிக்கும் ஐஸ்வரியா தீபாவுக்கு சப்போர்ட் பண்ணி பேச ஐஸ்வர்யாவாக நடிக்கும் அருண் இந்த வீட்ல எல்லா பிரச்சனையும் அவளாலதான் அதனாலதான் அவகிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்கேன் என்று கூறுகிறான். அதன் பிறகு மீனாட்சி ஆனந்தாகவும் ஆனந்த் மீனாட்சி ஆகவும் மாறி சமையல் பற்றி பேசி நடித்துக் காட்டுகின்றனர். 

தொடர்ச்சியாக அபிராமி அருணாச்சலமாகவும் அருணாச்சலம் அபிராமியாகவும் மாறி நடிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... வைரமுத்து எழுதிய நூலை வெளியிட்ட முதல்வர்... ஆத்திரத்தில் சின்மயி போட்ட எக்ஸ் பதிவு வைரல்

click me!