கரெண்ட் ஷாக் கொடுத்த சிதம்பரம்.. கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸ் - கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின அப்டேட

By manimegalai a  |  First Published Dec 30, 2023, 10:02 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் எல்லாரும் ரிஸார்டுக்கு வந்திருக்க செல்பி பாட்டி ஏதாவது கேம் விளையாடலாம் என்று சொல்லிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
 


அதாவது, செல்பி பாட்டி வீட்டில் உள்ள பெண்கள் எல்லாரையும் நிற்க வைத்து ஒவ்வொரு ஆண்களாக அழைத்து அவர்களது கண்ணை கட்டி விட்டு கையை தொட்டு பார்த்து மனைவி யார் என்பதை கரெக்ட்டாக கண்டு பிடிக்க வேண்டும், அது தான் இந்த கேம் என்று சொல்கிறார். 

முதலாவதாக அரவிந்தை கூப்பிட அவன் மீனாட்சியை கண்டு பிடிக்க முயற்சிக்க முடியாமல் போகிறது. அடுத்தாக அருணுக்கு கண்ணை கட்டி விட அவனும் ஐஸ்வர்யாவை சரியாக கண்டுபிடிக்க தவறுகிறான். மூன்றாவதாக கார்த்திக்கு கண்ணை கட்டி விட அவன் தீபாவின் கையை பிடிக்காமலேயே தீபா இடத்திற்கு வந்து நின்று கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறான். 

Latest Videos

Sakshi Agarwal: உச்சகட்ட கவர்ச்சி.. முதல் முறையாக பிகினி உடையில்.. சைடு போஸில் மிரள வைத்த சாக்ஷி அகர்வால்!

இதெல்லாம் நடந்து முடிந்ததும் சிதம்பரம் தீபாவுக்கு போன் போட்டு எனக்காக வந்து பாட சொல்லியிருந்தேன் என்னாச்சு என்று கேட்க தீபா முடியாது என்று மறுக்க சிதம்பரம் பொறுமையாக சொல்லி பார்த்துட்டேன், சரிப்பட்டு வரல. அப்படினா உன் குடும்பத்துக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து விட வேண்டியது தான் என்று போனை வைக்க தீபா யாருக்கு என்ன ஆக போகுதுனு தெரியாமல் பதறி தவிக்கிறாள். இறுதியாக அருணாச்சலம் சார்ஜ் போட போகும் போது கரெண்ட் ஷாக் அடிக்க எல்லாரும் பதறுகின்றனர். 

Leo Prabhu Death: தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய மற்றொரு மரணம்! பழம்பெரும் நடிகர் லியோ பிரபு காலமானார்.!

என்ன பிரச்சனை என்று பார்க்க வந்த மேனேஜருக்கும் கரெண்ட் ஷாக் அடிக்க செல்பி பாட்டி கட்டையால் அடித்து காப்பாற்றுகிறார். மழைக்காலம் என்பதால் இப்படி நடந்திருக்கலாம் என்று எல்லாரும் நினைக்க தீபா அதிர்ச்சியில் நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

click me!