DJD இன்ட்ரோ ரவுண்ட்.. இசை நிகழ்ச்சி, சிறப்பு திரைப்படங்கள் - புத்தாண்டு கொண்டாட்டம் - ஜீ தமிழில் செம ட்ரீட்.!

Published : Dec 29, 2023, 09:06 PM IST
DJD இன்ட்ரோ ரவுண்ட்.. இசை நிகழ்ச்சி, சிறப்பு திரைப்படங்கள் - புத்தாண்டு கொண்டாட்டம் - ஜீ தமிழில் செம ட்ரீட்.!

சுருக்கம்

இந்த புத்தாண்டை மேலும் பொலிவாக்க, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய மொத்த விவரங்கள் இதோ..  

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக தடம் பதித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. 

சமீபத்தில் சரிகமப நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நடந்து முடிந்ததை தொடர்ந்து சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கியது. பல வகையான ஆடிஷன் மூலமாக மொத்தம் 24 போட்டியாளர்கள் தேர்வாகிய நிலையில் கடந்த வாரம் ஒளிபரப்பான மெகா ஆடிஷன் மூலமாக மொத்தம் 12 போட்டியாளர்கள் தேர்வாகினர். 
இந்த வாரம் அறிமுக சுற்று ஒளிபரப்பாக உள்ள நிலையில் 12 சாமானிய போட்டியாளர்களுடன் இணைந்து நடனமாட போகும் 12 பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் குறித்து பார்க்கலாம் வாங்க. 

1. ஜான் எட்வின் - ரிஷா 
2. நாகராஜ் - ரியா விஸ்வநாதன் 
3. ஆனந்த் - நக்ஷத்திரா 
4. சுரேஷ்குமார் - ஹேமா 
5. பூர்ணிமா - ராஜா வெற்றி வசந்த் 
6. இப்ராஹிம் - அக்ஷிதா 
7. குரு - ரியா சௌதாரி 
8. கௌரி கோபன் - விவேக் ராஜகோபால் 
9. பிரின்ஸ் சேவியர் - காயத்ரி ஹேமா 
10. ஸ்வாதி நாயர் - சபரி 
11. பிரியதர்ஷினி - உதய்
12. அக்ஷதா - சூப்பர் டீலக்ஸ் நவீன் 

இந்த 12 ஜோடிகள் மக்கள் மனதை கவர போவது எப்படி? என்பது குறித்து அறிய டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் 2 நிகழ்ச்சியை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Vijayakanth: விஜயகாந்தின் இறுதி நிமிடங்கள்! ரசிகர்களின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் கேப்டன்! போட்டோஸ்!

சனி மற்றும் ஞாயிறு தினங்களில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரி லோடட் 2 நிகழ்ச்சியின் அறிமுக சுற்று நடைபெற உள்ளதை தொடர்ந்து வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு பிரதீப் குமாருடன் சரிகமப குழுவினர் இணைந்து கலக்கிய காற்றின் மொழி என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. 

மறுநாள் புத்தாண்டு தினமான திங்கள் கிழமை காலை 8 மணிக்கு சுகி சிவம் தலைமையில் வெற்றியை தீர்மானிப்பது அறிவா? உணர்ச்சியா? என்ற தலைப்பில் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் கலகலப்பான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. அதனை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு சந்தானம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

72 துப்பாக்கி குண்டுகள் முழங்க விஜயகாந்துக்கு அரசு மரியாதை! இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் முதல்வர் ஸ்டாலின்!

பிறகு மதியம் 3 மணிக்கு காஜல் அகர்வால், யோகி பாபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கோஷ்டி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது, சிறப்பு பட்டிமன்றம் மற்றும் திரைப்படங்களுடன் புத்தாண்டு தினத்தை ஜீ தமிழோடு இணைந்து கொண்டாட தயாராகுங்கள்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Siragadikka Aasai : வீட்டை மீட்க மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் முத்து... சிந்தாமணிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!
Ethirneechal Thodargiradhu : நந்தினி - ஜனனி இடையே வெடித்த மோதல்... தர்ஷினியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்