ரெசார்ட்டில் நடக்கும் ரொமான்ஸ்..!கார்த்திக், தீபாவை கலாய்த்த மீனாட்சி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

By manimegalai a  |  First Published Dec 28, 2023, 10:19 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் எல்லோரும் ரெசார்ட்டில் வந்து இறங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, மீனாட்சி தீபாவிடம் வந்து செம குளூரான கிளைமேட் ரிசார்ட் வந்து இருக்கோம். அப்புறம் என்ன இன்னைக்கு உனக்கும் கார்த்திக்கும் ஃபர்ஸ்ட் நைட் நடத்திட வேண்டியதுதான் என்று சொல்ல தீபா போங்க அக்கா என்று வெட்கப்படுகிறாள். 
 


அடுத்ததாக கார்த்திக் மற்றும் தீபா ரூமில் ரெசார்ட் நல்லா இருக்கு என்று பேசிக் கொண்டிருக்க பிறகு தீபா பாத்ரூமுக்குள் செல்ல தெரியாமல் சுவரை ஆன் செய்துவிட தண்ணீர் மொத்தமும் மேலே கொட்டுகிறது. பிறகு உதவிக்கு வரும் கார்த்திக் ஷவரை ஆப் செய்து வெளியே அழைத்து வர இருவருக்கும் இடையே ரொமான்ஸ் நடக்கிறது. 

பிறகு தீபாவின் துணிகள் எதுவும் இன்னும் ரூமுக்கு வரவில்லை என்பதால் கார்த்திக் தன்னுடைய துணியை கொடுத்து மாற்றிக்கொள்ள சொல்ல தீபா தயங்கி நிற்பதை பார்த்து கார்த்திக் ஓ சாரி மறந்துட்டேன் நான் வெளியே போறேன் என்று கிளம்ப தீபா வேண்டாம் சார் நீங்க கண்ணு திறக்காமல் இருந்தால் போதும் என்று துணியை மாற்றிக் கொள்கிறாள். 

Latest Videos

தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் விஜயகாந்த்! உணர்வு பொங்க இரங்கல் தெரிவித்த ராதிகா!

பிறகு தீபாவின் துணியை எடுத்து வரும் மீனாட்சி, தீபா கார்த்திக் ட்ரஸ் போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து என்ன கார்த்திக் எல்லாம் நல்லபடியா முடிந்ததா என்று கேட்க அவனும் முடிந்தது என்று பதில் சொல்கிறான். 

Vijayakanth Wish: இரண்டு மகன்கள் இருந்தும்... கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் ஆசை!

பிறகு தீபா அவங்க என்ன கேக்குறாங்க நீங்க என்ன பதில் சொல்றீங்க என்று கேட்க அங்கு என்ன கேட்டாங்கன்னு எனக்கு தெரியும் அப்படியே இருந்துட்டு போகட்டும் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

click me!