தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சூடாமணி சௌந்தர பாண்டி தர்மகத்தாவாக இருந்து நகைகளை திருடுவது பல கனவு காண சண்முகம் அம்மாவை பார்க்க ஸ்டேஷனுக்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது சூடாமணி சண்முகத்திடம் நீ தர்மகத்தா தேர்தலில் நின்னு ஜெயிக்கணும் என்று சொல்ல பரணி வேண்டாம் என்று சொன்னீர்கள் அதனால் தான் நிக்கல என்று கூறுகிறான். நீ தர்மகத்தாவை ஜெயிக்கணும் அப்பதான் அந்த சௌந்தரபாண்டியோட தில்லு முல்லு வேலைகள் வெளியே வரும் நானும் ஜெயிலிருந்து வெளியே வர முடியும் என்று சொல்ல சண்முகம் நான் தேர்தலில் நின்னு ஜெயிக்கிறேன் என வாக்கு கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான்.
அதைத்தொடர்ந்து கோவிலில் சௌந்தரபாண்டி எல்லோரையும் கூட்டி நிற்க வைத்து சண்முகம் இந்த தேர்தலில் நிற்கப் போவதில்லை அதனால் தன்னை தேர்வு செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறார்.
Vijayakanth Wish: இரண்டு மகன்கள் இருந்தும்... கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் ஆசை!
இது எதுவும் தெரியாமல் ஒரு பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கும் சண்முகத்திடம் மாற்றுத்திறனாளி ஒருவர் பூஜை செய்ய வேண்டும் கோவிலில் விட்டு விடுமாறு உதவி கேட்க சண்முகம் அவரை கூட்டிக்கொண்டு வருகிறான். இங்கே சௌந்தரபாண்டி ஊர் பெரியவர்களிடம் பத்திரத்தில் கையெழுத்து போட சொல்லி கேட்டுக் கொண்டிருக்க சண்முகம் கோவிலில் நோக்கி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.