Pooja Hegde Dance: பீஸ்ட் பட நடிகையுடன் சேர்ந்து அனிருத் மேடையில் போட்ட குத்தாட்டம்...செம்ம வைரல் வீடியோ..!

Published : Apr 09, 2022, 09:52 AM IST
Pooja Hegde Dance: பீஸ்ட் பட நடிகையுடன் சேர்ந்து அனிருத் மேடையில் போட்ட குத்தாட்டம்...செம்ம வைரல் வீடியோ..!

சுருக்கம்

Pooja Hegde Dance: பீஸ்ட் பட விழாவில், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குனர் நெல்சனுடன் சேர்ந்து நடிகை பூஜா ஹெக்டே செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார். 

பீஸ்ட் பட விழாவில், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குனர் நெல்சனுடன் சேர்ந்து நடிகை  பூஜா ஹெக்டே செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார். 

இன்னும் நான்கு நாட்களில் பீஸ்ட் ரீலிஸ்:

நடிகர் விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் திரைப்படம், ஏப்ரல் 13 ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. இப்படத்திற்காக, டிக்கெட் புக்கிங் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

நெல்சன் இயக்கத்தில், இப்படம் ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் நிறைந்த கமர்ஷியல் படமாக தயாராகி உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், ஷான் டாம் சாக்கோ வில்லனாகவும் நடித்துள்ள இப்படத்தில் யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பான் இந்தியா திரைப்படம்:

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின், பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அனிருத்   அமைத்துள்ளார். மேலும், பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பீஸ்ட் படத்தின் ரிலீஸ் அப்டேட்:

பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் ஒன்றாக வரும்ஞாயிற்று  கிழமை இரவு 9 மணிக்கு நடிகர் விஜய் கலந்துகொண்ட பேட்டி சன் டிவியில் ஒளிபரப்பு ஆகிறது.

அனிருத்துடன், பூஜா ஹெக்டே போட்ட குத்தாட்டம்:

மேலும், இப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷனுக்காக பீஸ்ட் படக்குழு ஐதராபாத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தது. இந்த பீஸ்ட் பட விழாவில், நடிகை பூஜா ஹெக்டே, நெல்சன் திலிப்குமார், அனிருத் உள்ளிட்டோர்  கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் படிக்க...Blue sattai maran: மீண்டும் விஜய்யை சீண்டும் ப்ளூ சட்டை...பீஸ்ட் ரீலிஸ் குறித்து சர்சை பேச்சு ..!
 
அப்போது, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குனர் நெல்சனுடன் சேர்ந்து நடிகை  பூஜா ஹெக்டே செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?
ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!