சீரியல் தரப்பில் இருந்தும் முகத்தை சரி செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி கொண்டே இருந்தார்கள் ஆனால் இவர் தன்னால் முடியவில்லை என்று இந்த சீரியல் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் அறிமுகமாகியிருந்தார் விஜே தீபிகா. சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக வலம் வந்த இவர் முன்னதாக பரியேறும் பெருமாள் படத்தில் நாயகிக்கு தோழியாக நடித்திருந்தார். பின்னர் தொலைக்காட்சியில் இவருக்கு தொகுப்பலினுக்கான வாய்ப்பு கிடைத்தது. படத்திற்கு பிறகு சீரியலில் நடிக்க வாய்ப்பு தேடிவந்த இவருக்கு மிஞ்சியது நிராகரிப்பு மட்டும் தான். பின்னர் ஒருவழியாக பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
அதில் பாண்டியன் குடும்பத்தின் கடைசி தம்பி ஆன கண்ணனுக்கு ஜோடியாகா வி.ஜே.தீபிகா நடித்திருந்தார். ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த இவருக்கு அதிக பாராட்டுக்கள் கிடைத்தது. ஆனால் அதிலும் சில சோதனைகளை சந்தித்தார் தீபிகா. அந்த தொடரில் நடித்து வந்த போது மேக்கப் ஒவ்வாமை காரணமாக இவருக்கு முகம் முழுவதும் பருக்கள் ஏற்பட துவங்கியுள்ளது. அதன் பின்னர் முகத்தில் அதிகமான முகப்பருக்கள் ஏற்பட்டதால் அதிக நெகட்டிவ் கமெண்ட்கள் கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு...ராஷ்மிகாவிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ரசிகர்கள்...பதறிப்போன வாரிசு பட நாயகி..
அதோடு அந்த சீரியல் தரப்பில் இருந்தும் முகத்தை சரி செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி கொண்டே இருந்தார்கள் ஆனால் இவர் தன்னால் முடியவில்லை என்று இந்த சீரியல் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சிகிச்சை எடுத்துக்கொண்ட தீபிகா பழைய நிலைக்கு திரும்பினார். தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களில் நடித்து வருகிறார் தீபிகா.
மேலும் செய்திகளுக்கு...சத்தமில்லாமல் நடந்த பிரபல இயக்குனரின் திருமணம்... வைரலாகும் புகைப்படங்கள் இதோ
கிராமத்தை சேர்ந்த தீபிகா சோசியல் மீடியாவிலும் பிசியாக இருக்கிறார். அதோடு சொந்தமாக யூட்யூப் சேனலும் ரன் செய்து வருகிறார். அவ்வப்போது தனது வாழ்க்கை குறித்து பதிவிட்டு வரும் இவர் தற்போது சிறிய அளவில் தனது தாய் தந்தையின் ஆசைக்கேற்ப வீடு ஒன்றை கட்டியுள்ளார். அதுகுறித்த பதிவையும் தீபிகா வெளியிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இவர் ஒவ்வொரு இடத்திலும் அவருடைய அம்மா மற்றும் அப்பாவின் மீது இருக்கும் பாசத்தை அவர்களின் கனவுகளையும் அந்த வீடியோவில் விவரித்துள்ளார். இது குறித்து நீங்கள் கட்டியிருக்கும் வீடு சிறிது தான் என்றாலும் உங்களது மனசு பெரிது என்று இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தீவிரவாதி...கொந்தளிக்கும் பாரதி ...என்ன செய்ய போகிறார் தெரியுமா?