கருப்பு வண்ண குட்டை உடையணிந்து குதூகலமான போஸ்களை கொடுத்துள்ளார் கௌரி கிஷன். அந்த புகைப்படத்தில் மினுப்பான உடையுடனும் காதில் கருப்பு வண்ண பெரிய தோடு அணிந்து கண்களால் ஈர்க்கிறார் நாயகி.
தமிழ், மலையாளம், தெலுங்கு என பிரபலமாகி வருபவர் கௌரி ஜி கிஷன். இவர் விஜய் சேதுபதியின் நாயகனாக நடித்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்தவர். அந்தப் படத்தில் சிறு வயது த்ரிஷாவாக தோன்றி பாராட்டுகளை பெற்றிருந்தார் கௌரி. கியூட் பள்ளி மாணவியாக ராமை மட்டுமல்லாமல் பார்ப்பவர்களையும் ஜானு கவர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கில் ரீமேக்கான ஜானு படத்திலும் சிறு வயது கதாநாயகியாக இவர் தான் ஒப்பந்தமானார். அந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
96 படம் வெளியாகி 90ஸ் கிட்ஸ் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. பள்ளி பருவ ஞாபகங்களையும் மலரும் நினைவுகளையும் தூண்டி இருந்த அந்த படம் மூலம் தான் கௌரி கிஷன் திரையுகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார். இதை தொடர்ந்து குரு, கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கர்ணனில் பொழிலால் என்னும் முக்கிய வேடத்தில் தோன்றியிருந்தார். பின்னர் மலையாள உலகிற்கு திரும்பிய கௌரி அனுகிரஹீதன் ஆண்டனி என்னும் படத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு தோன்றினார்.
மேலும் செய்திகளுக்கு...Vendhu Thanindhathu Kaadu Audio Launch : வெளியானது 'வெந்து தணிந்தது காடு' இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் !
மேலும் செய்திகளுக்கு...ஆயிரம் கோடி சம்பளம் கொடுத்தாலும் நான் வரமாட்டேன்... பிரபல நடிகரின் பிடிவாதத்தால் தொகுப்பாளரை மாற்றிய பிக்பாஸ்
பின்னர் மீண்டும் தமிழில் அந்தாலாஜி படமான புத்தம் புது காலை விடியாதா என்னும் படத்தில் குயிலியாக நடித்திருந்தார். இவரது நடிப்பு பாராட்டுகளை பெற்றிருந்தது. தற்போது தெலுங்கில் ஒரு படமும்., தமிழில் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் கௌரி ஜி கிஷன். அதோடு உதயநிதி ஸ்டாலினின் மனைவி கீர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காகித ராக்கெட் படத்தில் சாருவாக நடித்திருந்ததன் மூலம் வெப் சீரிஸிலும் அறிமுகமாகியுள்ளார்.
சில படங்களில் நடித்திருந்த போதிலும் பல விருதுகளை தட்டி சென்றுள்ளார் கௌரி. இவர் சிறந்த அறிமுக நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த காதபாத்திரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பல விருதுகளை தட்டிச் சென்றுள்ளார். இதற்கிடையே கதாநாயகி வாய்ப்பை தேடி வரும் கௌரி கிஷன், அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் அந்த வகைகள் இவர் வெளியீடும் புகைப்படங்கள் அனைத்தும் அதிக பாராட்டுகளை பெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... நிர்வாண போட்டோஷூட் ஏன்?... ரன்வீர் சிங்கிடம் 2 மணிநேரம் விசாரணை நடத்திய போலீசார் - வாக்குமூலம் அளித்த நாயகன்
இந்நிலைகயில் கருப்பு வண்ண குட்டை உடையணிந்து குதூகலமான போஸ்களை கொடுத்துள்ளார் கௌரி கிஷன். அந்த புகைப்படத்தில் மினுப்பான உடையுடனும் காதில் கருப்பு வண்ண பெரிய தோடு அணிந்து கண்களால் ஈர்க்கிறார் நாயகி.