
வனிதா விஜயகுமார் பற்றி நெட்டிசன் ஒருவர் மகன் ஸ்ரீஹரியிடம் கேள்வி கேட்ட, மகன் கொடுத்த ஷாக்கிங் பதில் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.
வனிதா -திருமணம்:
வனிதா விஜயகுமார், இளம் வயதில் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இதையடுத்து, வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இதையடுத்து, குடும்பம், குழந்தை என செட்டில் ஆகி விட்டார். இடையில், இருவருக்கும் மன கசப்பு ஏற்பட்டு கடந்த 2005ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
இதையடுத்து, தனது மகன் ஸ்ரீஹரியை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று ஆகாஷ் வழக்கு தொடர்ந்து அதில் ஜெயித்தார். தற்போது தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார் வனிதா.
பிக்பாஸ் சீசன் 3 யில் வனிதா:
நீண்ட இடைவெளிக்கு பிறகு சர்சைக்கு பேர் போன, நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு சர்சைகளில் சிக்கியுள்ளார் . அதன்பின்னர் பிக்பாஸில் இருந்து வெளிய வந்த பிறகு குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு..? பிக்பாஸ் ஜோடிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அதனை தொடர்ந்து சினிமாவிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
வனிதா 3 வது திருமண வாழ்கை:
வனிதா சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் 3 வது முறையாக பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரையும் விட்டு பிரிந்தார்.
வனிதா தனது மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து:
இந்நிலையில், வனிதா தனது மகன் பிறந்தநாளிற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை இணையத்தில் பகிர்ந்து கொண்டார். அதில், ஒரு அம்மாவாக இது என் 21வது பிறந்தநாள். என் முதல் மகன் ஸ்ரீஹரி பிறந்து 21 வயதை கடந்துள்ளான். என்னுடைய அழகான திறமையான மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்திருந்தார்.
வனிதாவின் மகன் ஸ்ரீஹரி நெத்தியடி பதில்:
இந்நிலையில், நெட்டிசன் ஒருவர், இணையத்தில் ''ஸ்ரீஹரியிடம் நீங்கள் வனிதாவின் மகனா ப்ரோ என கேட்க அதற்கு ஸ்ரீஹரி, நான் ஆகாஷின் மகன் என பதில்'' கூறியுள்ளார். இதை கேட்ட நெட்டிசன் வாயடைத்து போய் விட்டார். இன்னும், சிலர் நீங்கள் கூறியது சரியான பதில் என்று கூறி வருகின்றனர். இந்த செய்தி தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.