Venkat: இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் மாஸ் கூட்டணி...கனவு நினைவானது, வெங்கட் பிரபு நெகிழ்ச்சி பதிவு

Published : Jun 23, 2022, 03:56 PM IST
Venkat: இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் மாஸ் கூட்டணி...கனவு நினைவானது, வெங்கட் பிரபு நெகிழ்ச்சி பதிவு

சுருக்கம்

Venkat Prabhu: வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படத்தில், இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து பணிபுரிய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றதில் இருந்து, கோலிவுட்டில்  வெங்கட் பிரபு முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். வெங்கட் பிரபு சென்னை 28 என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுமானவர். முதல் படமே இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. 

வெங்கட் பிரபு இயக்குநர்:

இதையடுத்து, இவர் இயக்கத்தில் வெளியான மங்காத்தா திரைப்படம் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்தது. இந்த திரைப்படம் இவருடைய கேரியரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. இதையடுத்து, நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில், இவர் இயக்கிய மாநாடு மற்றும் மன்மத லீலை படங்களின் வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு,  தெலுங்கு பக்கம் சென்று விட்டார்.

 நாக சைதன்யா- வெங்கட்பிரபு கூட்டணி:

ஆம், தெலுங்கில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நாக சைதன்யாவின் திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி ஷேட்டி நடிக்கவுள்ளார். அதிகாரபூர்வமாக இது தொடர்பான, அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. 

இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. பெயரிடப்படாத இப்படம் நாக சைதன்யாவின் முதல் தமிழ்ப் படம் ஆகும். இப்படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் என்டர்டெய்னராக இருக்குமாம். 

இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி:

முன்னதாக, இந்த படத்தில் இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாஇசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.இந்த நிலையில், தற்போது இப்படத்தில் இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து பணிபுரிய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தற்போது, வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் “ எனது கனவு நினைவானது, முதல்முறையாக எனது பெரியப்பா  இளையராஜா மற்றும் எனது அன்பு சகோதரர் யுவனுடன் பணிபுரிய உள்ளேன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கார்த்திக் மற்றும் ரேவதி எப்போது ஒன்று சேர்வார்களா? கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்!
மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!