போலீஸ் அதிகாரிகள் தூக்க மாத்திரையை வைத்து தீவிரவாதிகளை பிடிக்க பாரதி ஏதோ திட்டம் தீட்டி விட்டதாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
விஜய் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறி வருகிறது. பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் வேலை செய்யும் மருத்துவமனையை தீவிரவாதிகள் ஹைஜெக் செய்கின்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள சென்ட்ரல் மினிஸ்டரை குறிவைத்து மருத்துவமனையை தன் வசப்படுத்தி உள்ள தீவிரவாதிகள் தங்களுடைய கோரிக்கை நிறைவேறிய பின்னரே மருத்துவமனையில் இருப்பவர்களை வெளியில் அனுப்புவோம் என கூறியுள்ளனர். பாரதியுடன் மருத்துவமனைக்குள் நுழைந்த காவல் அதிகாரியையும் கொலை செய்யும் தீவிரவாதிகள் பின்னர் பாரதியை மிரட்டி மினிஸ்டருக்கு அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும் அவரின் உயிரை காப்பாற்றா விட்டால் இங்கு இருப்பவர்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டுகிறார்கள்.
மாட்டிக்கொள்ளும் மக்களில் கண்ணம்மா, லட்சுமி, பாரதியின் தம்பி மற்றும் தம்பி மனைவி உள்ளிட்டோர் சிக்கி உள்ளனர். இதற்கிடையே அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள் என ஒரு சீட்டைஎழுதிக் கொடுக்கிறார் பாரதி. அதை தீவிரவாதிகள் போலீசிடம் ஒப்படைக்கின்றனர் ஆனால் அதில் உள்ள மருந்து குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை. பின்னர் பாரதியுடன் வேலை பார்க்கும் ஒரு மருத்துவரை வரவழைக்கின்றனர். அந்த மருந்து சீட்டை பார்த்துவிட்டு மேலே இருப்பது அனைத்தும் ஆபரேஷனுக்கு தேவையான மருந்து கீழே இருப்பவை தூக்க மருந்து என தெரிவிக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு...பாரதிராஜாவுக்கு திருமணம் செய்தே தீருவேன்...அடம்பிடிக்கும் இளையராஜா
மேலும் செய்திகளுக்கு...என்னது...புஷ்பா -2 வில் சாய்பல்லவியா? கதாபாத்திரம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்
இதை கேட்ட போலீஸ் அதிகாரிகள் தூக்க மாத்திரையை வைத்து தீவிரவாதிகளை பிடிக்க பாரதி ஏதோ திட்டம் தீட்டி விட்டதாக பேசிக் கொண்டிருக்கின்றனர். நேற்றைய எபிசோடில் மருத்துவமனைக்குள் செவிலியரிடம் தகாத முறையில் நடந்து கொள்கிறார் தீவிரவாதி ஒருத்தர் இதை அறிந்த பாரதி மற்றும் கண்ணம்மா மிகுந்த கோபத்தில் இருக்கின்றார். எப்படியாவது அந்த தீவிரவாதிகளை பிடித்து விட வேண்டும் என முடிவு செய்கிறார் பாரதி. இன்று அமைச்சருக்கு ஆபரேஷன் செய்யும் வேலைகளை துவங்குகின்றனர். அதற்காக ஆபரேஷன் தியேட்டருக்கு நர்சுகளையும் அமைச்சரையும் அழைத்து செல்கிறார்கள். அதோடு பாரதி கேட்ட மருத்துவர்களும் வந்து விடுகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
மேலும் செய்திகளுக்கு...மாட்டுக்கறி சாப்பிட்டா தப்பு இல்லையா.? ரன்பீர் ஆலியாபட்டை கோவிலுக்குள் விடாமல் விரட்டிய விஷ்ய இந்து பரிஷத்.