தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி விவகாரத்து பேப்பரில் கையெழுத்து கேட்க பரணி பதிலடி கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ஷண்முகம் வீட்டில் எல்லாரும் சாப்பிட உட்கார்ந்த நிலையில் பரணி மட்டும் வராமல் ரூமுக்குள் இருக்கிறாள். இதனையடுத்து தங்கைகள் அவளை சாப்பிட கூப்பிட அவள் சௌந்தரபாண்டி சொன்னதை பற்றி பேசி வருந்துகிறாள். தன்னை பற்றி யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை என வருந்துகிறாள்.
இதனை தொடர்ந்து மறுபக்கம் முத்துப்பாண்டி ஸ்டேஷனில் கேஸ் பைல்களை பார்த்து கொண்டிருக்கும் போது அங்கு வரும் சிவபாலன் எங்க அப்பா அம்மாவை ரூமுக்குள் பூட்டி வைத்து கொடுமைப்படுத்துறாரு அவர் மேல கம்பளைண்ட் கொடுக்கணும் என சொல்ல முத்துப்பாண்டி சிரித்து விட்டு வீட்டிற்கு போடா என்று சொல்ல சிவபாலன் போக முடியாது என்று பதிலடி கொடுக்கிறான். இங்க நீங்க இன்ஸ்பெக்டர், நான் கம்பளைண்ட் கொடுக்க வந்திருப்பவன் எனவும் சொல்ல முத்துப்பாண்டி அடிக்க போக கான்ஸ்டபிள் நான் தம்பிக்கு புரிய வைத்து அனுப்புறேன் என்று சொல்லி சிவபாலனை அனுப்பி வைக்கிறார்.
ஷண்முகம் அத்தைக்கு ஒரு பிரச்சனை என்றால் எலலா முறையும் நான் வந்து காப்பாற்ற முடியாது. அவங்களை காப்பாற்ற தான் ஆண்டவன் உன்னை புள்ளையா கொடுத்து இருக்கான் என்று சொல்ல சிவபாலன் உங்க அளவுக்கு என்கிட்ட தைரியம் இல்ல மாமா என்று சொல்ல ஷண்முகம் ஒரு குட்டி வேல் கொடுத்து கொடுத்து இதை வச்சிக்கோ தைரியம் தானா வரும் என சொல்கிறான்.
பிறகு வீட்டிற்கு வந்த சிவபாலன் மண்ணெண்ணெயை மேலே ஊற்றி கொண்டு அம்மாவை வெளியே விடலானா கொளுத்தி கொண்டு செத்து போய்டுவேன் என்று மிரட்ட சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். யாரவது கிட்ட வந்தா அவங்களையும் சேர்த்து கொளுத்திடுவேன் என்று மிரட்ட பயந்து போய் பாக்கியத்தை வெளியே விடுகிறார் சௌந்தரபாண்டி.
வெளியே வந்த பாக்கியம் எனக்காக ஏன்டா இப்படி பண்ணுன என்று கேட்க உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன் என்று சொல்ல பாக்கியம் அவன் பாசத்தை கண்டு கண் கலங்குகிறாள். பிறகு பாக்கியம் சண்முகத்தின் கடைக்கு வந்து பரணி ஹாஸ்பிடல் கட்டணும்னு பணம் கேட்டு வீட்டிற்கு வந்தா, உங்க மாமா கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு நீயாவது அவளுக்கு சின்னதாக ஒரு ஹாஸ்பிடல் கட்டி கொடுத்து அவ மனசுல இடம் பிடித்து சந்தோசமாக வாழ்க்கையை வாழ பாரு என்று சொல்கிறாள்.
வீட்டிற்கு அல்வாவுடன் வரும் ஷண்முகம் அதை எல்லாருக்கும் கொடுக்க பரணிக்கும் கொடுக்க அவள் என்ன விஷயம் என்று கேட்கிறாள். உனக்கு ஹாஸ்பிடல் கட்டி தர போறேன் என்று சொல்ல எனக்கு கட்டிக்க தெரியும் எதுவும் செய்ய வேண்டாம் என ஷாக் கொடுத்த எடுத்த அல்வாவையும் திருப்பி வைத்து விடுகிறாள். நைட் ஷண்முகம் தூங்கி கொண்டிருக்கும் போது பரணி அவனுக்கு தெரியாமல் அல்வாவை எடுத்து சாப்பிட ஷண்முகம் கண் விழித்து விட பரணி மாட்டிக் கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.