தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் தன்னுடைய அப்பாவிடம் பரணி பற்றி பெருமையாக பேசிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வைகுண்டம் பரணிக்கு நான் மாமனார் என்பதற்கு முன்னாடி அவளுடைய தாய்மாமன் என்று சொல்கிறார், பிறகு கனி அங்கு வந்து அண்ணியை எதுக்கு அண்ணா வெளியே போக சொல்கிற என்று கேட்க பதில் சொல்ல முடியாமல் கட்டி பிடித்து கண் கலங்குகிறான்.
அடுத்து நைட் எல்லாரும் தூங்கிய பிறகு புட்டுபுடப்புக்காரன் வந்து இந்த வீட்டிற்கு புதிய உயிர் வர போகுது என்று சொல்ல தங்கைகள் அதை கேட்டு கன்பியூஸ் ஆக பரணி தூங்கி கொண்டிருக்கும் சண்முகத்தை எழுப்பி இதெல்லாம் உன் வேலை தானா என சண்டை போடுகிறாள். அதோடு வெளியே வந்து குடுகுடுப்பு காரனை அடித்து விரட்டி விட தங்கைகள் சிரிக்கின்றனர். அதே சமயம் அவர் சொன்னதை யோசிக்கின்றனர்.
மறுநாள் ஷண்முகம் கடைக்கு கிளம்ப பரணி மாத்திரை வாங்கணும் என்று சொல்ல அவளையும் கூட்டி கொண்டு கிளம்பும் போது வழியில் ஒரு குழந்தை ஸ்கூலுக்கு நடந்து செல்ல அதை தூங்கி இருவருக்கும் நடுவில் உட்கார வைத்து அழைத்து செல்கின்றனர். ஷண்முகம் பொறுமையாக வண்டி ஓட்ட சைக்கிளில் இவர்களை கடந்து செல்லும் சிறுவன் பாய் சொல்லிட்டு போக அந்த குழந்தை நான் நடந்தே போறேன் என சொல்லி ஷண்முகம் வேகத்தை கலாய்க்க பரணி வேகமாக போக சொல்கிறாள்.
பிறகு பரணியை கடையில் இறக்கி விட்டுட்டு குழந்தையை ஸ்கூலில் விட செல்ல வெட்டுக்கிளி வெளியே போக பரணி கடைக்கு வருபவர்களை கவனிக்க அந்த வழியாக வந்த சௌந்தரபாண்டி இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். டாக்டருக்கு படிச்சவளை பொட்டலம் போட விட்டு இருக்கான் என சண்டை போட வருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.