பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து எதிர்பார்க்காத பல திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், நிக்சனை மாயா நாமினேட் செய்ய முடிவு செய்துள்ள புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி... கடந்த 6 சீசன்களை விட மிகவும் டஃப் கேம்மாக மாறியுள்ளது. சில போட்டியாளர்கள் ஹாய்யாக மிக்ஸர் சாப்பிட்டு கொண்டு, ஜாலியாக விளையாடி வரும் நிலையில்... சிலர் ஸ்டேடர்ஜியை கையாண்டு, அடுத்தடுத்த போட்டியாளர்களை எப்படி நாமினேட் செய்து வெளியே அனுப்புவது என, திட்டம் போட்டு விளையாடி வருகிறார்கள்.
ஏற்கனவே ஹவுஸ் மேட்ஸ் பூகம்பம் டாஸ்கில் தோற்றதால், அனன்யா ராவ் மற்றும் விஜய் வர்மா ஆகியோர் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்ததை, பிக்பாஸ் போட்டியை கடினமாக மாற்றியுள்ள நிலையில்... ஹரிஷ் கல்யாண் பார்க்கிங் படத்தின் புரொமோஷனுக்காக உள்ளே வந்து, பிக்பாஸ் வீட்டில் தங்கி போட்டியாளர்களை எண்டெர்டெயின் செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிக்பாஸ் இரண்டாவது புரோமோவில்... மாயா பூர்ணிமாவை பார்த்து, நிக்சனை செம்மையாக சேவ் பண்றீங்க என கூறுகிறார். இதை தொடர்ந்து பூர்ணிமா... இங்கு என்ன அநீதி நடந்தது என கேள்வி எழுப்புகிறார். நான் அநீதி என கூறி அவனுக்கு ஸ்ட்ரைக் தரலாம் என கூறுகிறார். பூனிமாவும் - மாயாவும் நிக்சனை நாமினேட் செய்வதில் முட்டி - மோதிக்கொள்ளும் நிலையில், விஷ்ணு மணியை அடித்தால் நான் காரணத்தை கூறுகிறேன் என சொல்கிறார். விஷ்ணு மணியை அடிப்பது போல் வருகிறார்.ஆனால் நடிக்கிறாரா? இல்லையா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரிய வரும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அக்ஷயா மற்றும் பிராவோ வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சரியான காரணத்துடன், நிக்சன் கேப்டன்சியின் அநீதி இழைத்தது நிரூபிக்க பட்டால்... அவரது கேப்டன் பதவி பறிக்க படுவதோடு, அடுத்த வாரத்திற்கு நேரடியாக நிக்சன் நாமினேட் செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D