தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கோகிலா கார்த்திக்கிடம் வசமாக சிக்கிட்டோம் என தப்பிக்க முயற்சி செய்ய முடியாமல் போனது. இதைத் தொடர்ந்து இன்று மற்றும் நாளைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கோகிலா இந்த விஷயத்தில் இருந்து தப்பிக்க கார்த்திக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விடலாம் என பிளான் போட, ரூபா ஸ்ரீ எதையாவது பண்ணி என்னை காப்பாத்துங்க என சொல்கிறார். பிறகு நீங்க மேடை ஏறுங்க டைம் ஆயிடுச்சு என இளையராஜா ரூபஸ்ரீயை மேடைக்கு ஏற்றி விடுகிறான்.
மறுபக்கம் தீபா எப்படிக்கா நான் முன்னாடி போய் பார்ப்பது என மீனாட்சியிடம் புலம்ப கார்த்திக்கு இங்கு நடக்கிறது எல்லாமே தெரியும். ஆனா உக்காந்துட்டு இருக்க இடத்தை விட்டு எழுந்திருக்க முடியாது அது மாதிரி என்கிட்ட ஒரு மாத்திரை இருக்கு அதை கொடுத்து விடலாம் என்று சொல்ல தீபா வேண்டாம் என மறுக்க மீனாட்சி மைண்ட் வாய்ஸில் மன்னிச்சிடு தீபா உன்ன காப்பாத்த வேற வழியில்லை என சொல்கிறாள்.
அடுத்ததாக கோகிலா பேரரிடம் ஜூஸில் மாத்திரையை கலந்து அதை கார்த்திக்கிடம் கொடுக்க சொல்ல ஜூஸூம் கார்த்திக் கைக்கு வந்து விடுகிறது. அவன் குடிக்க போகும் சமயத்தில் மீனாட்சி ஆப்பிள் ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க கார்த்திக் அதை வாங்கி குடிக்க மீனாட்சி கார்த்திக்கிடம் இருந்து ஜூசை வாங்கி குடித்து விடுகிறாள்.
இதனால் மீனாட்சி கொஞ்சம் மயங்கி உட்கார்ந்து விட்டேன் தீபா மேடைக்கு பின்புறமாக சென்று பாட கார்த்திக் அங்கு சென்று திரையை விளக்க பல்லவியாக அங்கு தீபா வேண்டாம் என தடுத்து விடுகிறார். கார்த்திக் உங்களுக்கு உதவி செய்ய தான் வந்திருப்பதாக சொல்ல வேண்டாம் என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை தலையிட வேண்டாம் என சொல்லி விடுகிறாள்.
இதனால் கார்த்திக் அப்படி என்றால் எனக்கு நீங்கள் ஒரு வாக்கு கொடுக்கணும் என உங்களுக்காக தான் நான் புதுசா ஒரு மியூசிக் கம்பெனி வாங்கி இருக்கேன் அங்க நீங்க வந்து கண்டிப்பா பாடணும் என சொல்ல தீபா தற்போது இதிலிருந்து தப்பிக்க வேறு வழியில்லை என்ற காரணத்தினால் சம்மதம் தெரிவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D