Ethirneechal Madhumitha : கர்நாடகாவில் பிறந்த தற்போது தமிழ் மொழியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியலில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் நடிகை தான் மதுமிதா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சீரியல் உலகில் நுழைந்தார்.
பெங்களூருவை சேர்ந்த 24 வயது நிரம்பிய மதுமிதா கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான சீரியலில் நடித்ததன் மூலம் கலை உலகில் தனது பயணத்தை தொடங்கினார். தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி சீரியல் நடிகையாக விளங்கி வந்த இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கடந்த 2019ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "பிரியாத வரம் வேண்டும்" என்கின்ற தமிழ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு அவருக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு தான் எதிர்நீச்சல் என்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு. தற்பொழுது தமிழ் சின்னத்திரை வரலாற்றில் அதிக TRP மற்றும் மக்களின் ஆதரவோடு வழங்கி வரும் ஒரு சீரியல் எதிர்நீச்சல் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் நடிகையாக மதுமிதா விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆதி குணசேகரனின் மறைவுக்கு பிறகு வேள ராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்தை ஏற்க துவங்கியதில் இருந்து சற்று டல் அடித்த எதிர்நீச்சல் சீரியல், தற்போது மீண்டும் உச்சத்திற்கு சென்றுள்ளது என்றால் அது மிகையல்ல.
இது ஒருபுறம் இருக்க, எதிர்நீச்சல் சீரியலில் குடும்பம் பாங்கான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வரும் மதுமிதா தனது தோழியுடன் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கிராபி என்ற இடத்தில் உள்ள கடற்கரையில் அவர் தன் தோழியோடு பிரபல தமிழ் பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. குட்டையான ஆடை அணிந்து தனது தோழியுடன் அவர் நடனமாடும் வீடியோ இப்பொழுது வைரல் ஆகி உள்ளது.