Bigg Boss: பிக்பாஸ் வீட்டை உலுக்கும் பூகம்பம்..! கடுமையான சோதனையில் ஹவுஸ் மேட்ஸ் வென்றார்களா? வெளியான ப்ரோமோ!

By manimegalai a  |  First Published Nov 21, 2023, 12:50 PM IST

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், ஏற்கனவே அறிவித்தது போல் இன்றைய தினம் ஹவுஸ் மேட்ஸ் இடையே பூகம்பம் வெடிக்க உள்ளது. இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
 


கடந்த 6 சீசன்களை விட, பிக்பாஸ் 7-ஆவது சீசனில், பல எதிர்பாராத ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு யுகேந்திரன் - வினுஷா ஆகிய இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றிய பிக்பாஸ், அதிரடியாக 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களை உள்ளே கொண்டு வந்தார்.

அர்ச்சனா, தினேஷ், பிராவோ ஆகிய மூன்று பேர் மிகவும் வலிமையான போட்டியாளர்களாக மாறி உள்ளே நிலைத்து நின்று விளையாடி வரும் நிலையில், கானா பாலா போன வாரம் எவிக்ட் ஆகி வெளியே சென்றார். அன்ன பாரதி வந்த ஒரே வாரத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் குறைவான ஓட்டுகளுடன் வெளியேற்றப்பட்டார்.

Tap to resize

Latest Videos

Rashmika Mandanna: கருகரு கருப்பாயி... பிளாக் கலர் சேலையில் குஷி பட ஜோதிகாவாக மாறிய ராஷ்மிகா! கியூட் போட்டோஸ்!

இதை தொடர்ந்து மீண்டும் நாமினேட் ஆகி வெளியேறிய போட்டியாளர்களை உள்ளே கொண்டு வர, பிக்பாஸ் பூகம்மம் என்கிற புதிய டாஸ்க் ஒன்றை, அறிமுகம் செய்துள்ளார். இந்த டாஸ்கில் ஹவுஸ் மேட்ஸ் தோற்றால், இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றுள்ள 3 போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்றும், அவருக்கு பதில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் மூன்று பேர் உள்ளே வருவார் என கூறப்படுகிறது. 

இந்த டாஸ்கின் முதல் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில், போட்டியாளர்கள் ஒரு ட்ராக் மீது பந்தை வைத்து அது கீழே விழாமல் பேஸ்கெட்டில் விழவைக்க வேண்டும். இந்த போட்டியில் போட்டியாளர்கள் வென்றார்களா? அல்லது தோற்றார்களா? என்பது இன்று தெரியவரும். 

 

இதை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், தினேஷ் மற்றும் விஷ்ணு ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். சில முக்கியமான தலைகள் நாமினேஷனில் சிக்கியதால், மற்றவர்கள் ஓட்டுக்களை சிதறவைத்து விட்டனர் என்றும், விக்ரம் நாமினேஷனில் சிக்காதது பெரிய விஷயம் என கூறுகிறார். பிக்பாஸ் சில போட்டியாளர்களை அனுப்பிவிட்டு, பழைய போட்டியாளர்களை வைத்து இந்த விளையாட்டை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல திட்டம் போட்டிருக்கலாம் என பேசி கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

 

click me!