Bigg Boss: ஒரு பிளேட் இல்லனா.. ஒரு ஸ்பூனாவது கொடுங்க! ப்ரோமோவில் நக்கலடித்த கமல்ஹாசன்!

Published : Nov 18, 2023, 03:03 PM IST
Bigg Boss: ஒரு பிளேட் இல்லனா.. ஒரு ஸ்பூனாவது கொடுங்க! ப்ரோமோவில் நக்கலடித்த கமல்ஹாசன்!

சுருக்கம்

கமலஹாசன் கலந்து கொள்ளும் இன்றைய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின், முதல் ப்ரோமோ சற்றுமுன் வெளியானது.  

பிக்பாஸ் சீசன் செவன் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் கமலஹாசன் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து, தீர விசாரிக்காமல் வெளியேற்றியதற்கு என்ன காரணம்? என்பது குறித்து தன்னிலை விளக்கம் கொடுத்தார். இதனை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் மாயா - பூர்ணிமா போன்றவர்களை, கமலஹாசன் விசாரிக்காமல் மூடி மழுப்பி பேசுவதாகவும் விமர்சனங்கள் வெளியானது.

தடாலடியாக TRP-யில் கயல் - எதிர்நீச்சலை பின்னுக்கு தள்ளிய புது சீரியல்! இந்த வார டாப் 10 தொடர்களின் முழு லிஸ்ட்

இதை தொடர்ந்து இன்றைய தினம், கமலஹாசன் யார் யாரை தீர விசாரிப்பார் என்பது குறித்த ஆவல் எழுந்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில், ஆரவாரத்துடன் வெளியே வரும் கமல் "வார வாரம் விளையாட்டு மாறிக்கொண்டே உள்ளது என்று உள்ளே பேசிக் கொள்கிறார்கள். ஆனால் என்ன மாறுகிறது என்று பார்த்தோம் என்றால், கூட்டணிகள் மாறுகிறது. புதிதாக சில நட்புகள் மலர்கிறது. அது எங்கு கொண்டு போய் விடுமோ? என்பதை பார்க்கலாம் என கூறுகிறார்.

Dhanush Son: ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டிய தனுஷ் மகன் யாத்ராவுக்கு அபராதம்! எவ்வளவு தெரியுமா?

தொடர்ந்து பேசும் கமல்ஹாசன், அப்புறம் எல்லோரும் ஒரு பிளேட் மரியாதை கொடுங்கப்பா என கேக்குறாங்க. ஒரு பிளேட்லாம் கட்டுப்படி ஆகாது என கூறினால், அட்லீஸ்ட் ஒரு ஸ்பூனாவது தாங்க என சொல்றாங்க, கிடைக்குதா இல்லையா என்பதை பார்ப்போம் இன்றிரவு என இந்த ப்ரோமோவில் கூறி இருந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் விசித்ரா மற்றும் அர்ச்சனா இருவரும் தங்களை வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் என்று, மத்த ஹவுஸ் மேத்ஸ் கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாமல், ஜெயிலுக்கு போக மறுத்தது மட்டுமின்றி, பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் செல்லாமல் வெளியிலேயே இருந்தனர். இது எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, கமலஹாசன் யாருக்கு ஆதரவாக பேசுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!!

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வில்லி தான் ஜெயிக்கிறாள்! 'கார்த்திகை தீபம்' சீரியல் கதையால் ரசிகர்கள் கொதிப்பு: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
மருமகன் மீது கொலை முயற்சி புகார்: 'கார்த்திகை தீபம் சீரியல் கார்த்திக் அதிரடி கைது!