Beast: பீஸ்ட் திரைப்படம், இன்னும் சில நாட்களில் வெளிவர உள்ள நிலையில், புதுச்சேரியில் விஜய் படத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனரை போலீசார் அகற்றியதால் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
பீஸ்ட் திரைப்படம், இன்னும் சில நாட்களில் வெளிவர உள்ள நிலையில், புதுச்சேரியில் விஜய் படத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனரை போலீசார் அகற்றியதால் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
சூடு பிடிக்கும் டிக்கெட் புக்கிங்:
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாகம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்காக, டிக்கெட் புக்கிங் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முன்பதிவுகள் அனைத்தும் தமிழகமெங்கும் பல இடங்களில் படு வேகமாக நடைபெற்று வருகிறது.
கொண்டாட்டத்தை துவங்கிய விஜய் ரசிகர்கள்:
இதனை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் என வழக்கம் போல கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். நடிகர் விஜய் சமீபத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி பேசு பொருள் ஆனது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் - போலீசாருடன் வாக்குவாதம்:
இந்நிலையில் வில்லியனூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கட்டவுட்டுக்கு அனுமதி இல்லை என இரவோடு இரவாக கொம்யூன் அதிகாரிகள் அதனை அகற்றியுள்ளனர். இதனால் கோபமடைந்த விஜய் ரசிகர் போலீஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அரசியல்வாதிகளின் கட்டவுட்கள் வைக்கும் போது மட்டும் ஏன் அகற்றவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பீஸ்ட் மாஸ்:
நடிகர் விஜய்யின் 65-வது திரைப்படமாக பீஸ்ட், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின், பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அனிருத் அமைத்துள்ளார். மேலும், பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி - வில்லியனூர் : நடிகர் விஜய் பட கட்-அவுட்களை புல்டோசர்களை கொண்டு நள்ளிரவில் அகற்றிய போலீசார்
விஜய் மக்கள் இயக்கத்தினர் போலீசாருடன் வாக்குவாதம் pic.twitter.com/GjlKW7SSNQ