Bigg Boss Ultimate: சர்பிரைஸாக தனது முன்னாள் காதலியை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் சிம்பு..எதற்காக தெரியுமா?

Published : Apr 09, 2022, 02:46 PM IST
Bigg Boss Ultimate: சர்பிரைஸாக தனது முன்னாள் காதலியை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் சிம்பு..எதற்காக தெரியுமா?

சுருக்கம்

Bigg Boss Ultimate: இறுதிப் போட்டியை இரண்டு நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ள பிக்பாஸ் அல்டிமேட் குழு, சர்பிரைஸாக சிம்பு பட நடிகையை உள்ளே அனுப்ப திட்டமிட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் நம்பர் 1 தொலைக்காட்சி நிகழ்ச்சியாக உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது வழங்கப்படும் பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில், கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.  

'பிக் பாஸ் அல்டிமேட்':

'பிக் பாஸ் அல்டிமேட்' என்கிற புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினர். இந்த ரியாலிட்டி ஷோ வழக்கம் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாவதற்கு பதிலாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது.

இதில், இந்நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதையடுத்து அவர் படப்பிடிப்பு பணிகளில் பிசியானதால் அவருக்கு பதில் சிம்பு தொகுப்பாளராக களமிறங்கினார். 


நிகழ்ச்சியில் இருந்து  வெளியேறிய ஜுலி மற்றும் அபிராமி:

இதில், 14 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் பைனலுக்கு பாலாஜி, நிரூப், தாமரை, ஜுலி, ரம்யா பாண்டியன், அபிராமி என  6 போட்டியாளர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனிடையே இந்த இறுதி வரை தாக்கு பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களான ஜூலி மற்றும் அபிராமி இருவரும் பாதியிலே வெளியேறினர். 

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் சிம்பு பட நடிகை:

இந்நிலையில், இறுதிப் போட்டியை இரண்டு நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ள பிக்பாஸ் அல்டிமேட் குழு, சர்பிரைஸாக நடிகை ஹன்ஷிகாவை இறுதி போட்டிக்கு வரவழைக்க உள்ளனர். அதாவது, சிம்புவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ள மஹா திரைப்படம் வரும் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காகவே, ஹன்சிகா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளாராம்.சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் சில வருடங்களுக்கு முன்பு காதலித்து, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இவர்களில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இவர்களில் அதிக ஓட்டு பாலாஜி முருகதாஸிற்கு உள்ளதாக தெரிகிறது. 

மேலும் படிக்க ....Meera Jasmine: ரீ-என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்...40 வயதானாலும், கவர்ச்சியில் வேற லெவல் போஸ்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கார்த்திக் மற்றும் ரேவதி எப்போது ஒன்று சேர்வார்களா? கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்!
மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!