Sneha Video: பிரபல நிகழ்ச்சியில் கதறி அழுத புன்னகை அரசி சினேகா...பதறிப்போன ரசிகர்கள்..வைரல் வீடியோ ....

Published : Apr 09, 2022, 12:36 PM ISTUpdated : Apr 09, 2022, 12:47 PM IST
Sneha Video: பிரபல நிகழ்ச்சியில் கதறி அழுத புன்னகை அரசி சினேகா...பதறிப்போன ரசிகர்கள்..வைரல் வீடியோ  ....

சுருக்கம்

Sneha Video: நடிகை சினேகா ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சி மேடையில், கதறி அழும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். தமிழில் விஜய், கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

நடிகை சினேகாவின் ஆரம்ப கால பயணம்:

இவர் கமலுடன் சேர்ந்து நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ், பம்மல் கே சம்மந்தம் மற்றும் சேரனுடன் ஆட்டோகிராப், தனுசுடன்நடித்த புதுப்பேட்டை உள்ளிட்ட தமிழ் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவையாகும். குறிப்பாக, தமிழ் சினிமாவில் தனது சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசியாக ரசிகர்களை கட்டி போட்டு வைத்துள்ளார். 

சினேகா- திருமண வாழ்கை:

2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் பிரசன்னாவுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்பு இரு வீட்டார் சம்மத்துடன் பிரம்மாண்டமாக சென்னையில் திருமணம் நடைப்பெற்றது.திருமணத்திற்கு பின்னரும் இருவரும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து விளம்பரப்படங்களிலும் நடித்து வருகின்றனர்.

நடிகை சினேகாவின், திரைப்படங்கள்: 

இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை கூடி காணப்பட்ட இவர், தற்போது வெகுவாக தன்னுடைய உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார். இதையடுத்து, திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே தேர்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக பட்டாஸ் திரைப்படம் வெளிவந்தது. அதனை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேடையில் கதறி அழுத சினேகா:

நடிகை சினேகா, பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சினேகா யாரோ ஒருவரை பார்த்து, கதறி அழுகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் படிக்க...Rahman: இந்தி மொழி திணிப்புக்கு எதிராக புகைப்படம் பதிவிட்ட ஏர்.ஆர்.ரகுமான்! அமித் ஷாவிற்கு தக்க பதிலடியா ?

PREV
click me!

Recommended Stories

கார்த்திக் மற்றும் ரேவதி எப்போது ஒன்று சேர்வார்களா? கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்!
மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!